தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 473 |
10. ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன ஓதற் பிரிவும் தூதிற் பிரிவும் உயர்ந்தோர்க் குரியன என்பது இச்சூத்திரப் பொருள். உயர்ந்தோர் யார்? எவ்வாறு உயர்ந்தோர்? ‘உயர்ந்தோர் என்பவர் அந்தணர் அரசர் என்ற முதலிறு வருணத்தார்’ என்று இளம்பூரணர் உரை கூறினார். ஆனால் நச்சினார்க்கினியர், ‘அந்தணர், அரசர், வணிகர் என்ற முதல் மூன்று வருணத்தாரும் உயர்ந்தோர்’ என்றுரைத்தனர். இவருரைகட்கு நாவலர் மறுப்பு : 1. நான்கு வருணப் பாகுபாட்டினை ஆரியர் அற நூற்களே வற்புறுத்துவன. தமிழ் மரபுக்கு அப்பாகுபாடுகள் ஒவ்வாதவை. 2. வணிகரைத் தாழ்ந்தவர் என இளம்பூரணர் நீக்கியது பொருந்தாது. வணிகரும் ஒழுக்கத்தாலும் செல்வத்தாலும் நாகரிகத்தாலும் உயர்ந்தோரே. தமிழ்நாட்டில், பண்டு அரசியல் சமுதாய அமைப்பு முறையில் நால்வகையினர் கீழோராக் கருதப்பட்டனர். 1. | அடியார் : போரிலோ, விலைக்கு வாங்கியோ | | அடிமையாக்கப்பட்டவர்கள். | | 2. | வினைவலர் : தொழில் வல்லவர்கள் | | 3. | ஏவன் மரபினர் : ஒருவனை யடைந்து அவன் ஏவலைச் | | செய்யும் உரிமை பூண்டு நிற்பவர். | | 4. | ஏவல் மரபின் ஏனோர் : நாள்தோறும் கூலிதருவார்க்குக் | | குற்றேவல் செய்து வாழ்பவர். |
இந்நால்வகையினரும் பிறர் ஏவலைச் செய்து வாழ்பவர் ஆதலின், இவர் கீழோர் எனப்படுவார். இந்நால்வகையினர் தமிழ்நாட்டி லிருந்தமையைச் சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் நன்கறியலாகும். இந்நால்வகைக் கீழோரே, ஓதுதலுக்கும் தூதுக்கும் உரியோராகார். இவர் தவிரத் தமிழ்நாட்டில் நானில மாந்தரும் உயர்ந்தோரே. |