தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 475 |
இழிந்த காம ஒழுக்கத்தை மறுதலைப் பொருளில் பெருந்திணை எனக் குறிக்கப் பெயரிட்டனர். இவ்வாறே நூல் முழுமையும் சூத்திரந்தோறும் நாவலர் பாரதியார் நல்ல பல கருத்துக்களை நமக்கு அள்ளி வழங்கியுள்ளார். அவர் கருத்துக்கள் பரவுவதால், மொழியானது வளமும் வனப்பும் செறிவும், திட்பமும் பெறும் என்பது திண்ணம். நன்மை தராப் புன்மைக் கருத்துக்களை எவர் கூறினும், எவர் போற்றினும் அவை நாளடைவில் நலிந்தொழியும். |