| 482 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
“முறுகிய தறுகண் முனைப்பால் உயிரிழந்த உடல் வீழாது நிற்றலும், துணிக்கப்பட்ட தலை முதலிய உறுப்புக்கள் நிலந்தோயாமல் துடித்தியங்கலும் ஆகிய இருவகை அரிய நிலையைச் சிறப்பாக உடையது தும்பைத்திணை. “இருநிலந் தீண்டாததிது எனக் குறியாமை, சிறப்பாகத் தலைதுடிப்பதுடன் இற்ற உறுப்பெதுவும் துடிக்கும் இயல்பிற்றாகலின் சுட்டிக்கூறல் வேண்டாமைபற்றி அமைந்தது. “அன்றியும், சென்ற உயிரின் நின்றயாக்கை’ எனப் பிரித்து, ‘இருநிலந்தீண்டா அருநிலை வகையோடு, இருபாற்பட்ட ஒரு சிறப்பின்று’ எனக் காட்டியதால், யாக்கையும் அதன் அறுபட்ட உறுப்பும் தனித்தனி சுட்டுங் கருத்துத் தெளியப்படும். [இங்கு, ‘அரு’ என்பதை அட்டை எனக்கொண்டு, அதன் பின்வரும் ‘இருபாற்பட்ட’ எனுந் தொடரை அவ்வட்டைக்கு அடையாக்கி, இரு கூறுபட்ட அட்டைப் பகுதிகள் தனித்தனி ஊர்ந்து இயங்குவது போலத் துணிக்கப்பட்ட தலையும் உடலும் தனித்தனி துடிக்கும் எனப் பொருள் கூறுவர் பழைய உரைகாரர். இரண்டின் மேற்பட வெட்டுண்ட அட்டைத் துண்டுகளும் துடிப்பதியல்பாதலால், இருபாற்பட்ட என்பது பொருளற்றதாகும். அன்றியும் ஊர்ந்து செல்லுதல் நிலமிசையேயாம் ஆதலால் இரு நிலந் தீண்டா அருநிலை எனற்கும் அமையாது. அதனால், இருபாற்பட்ட என்னும் தொடர் அதையடுத்துவரும் ‘ஒரு சிறப்புக்கே’ அடையாதல் தேற்றம். ] நின்ற யாக்கை, நிலந்தீண்டா உறுப்பு அருநிலை, என முறையே இரு திறப்பட்ட ஒரு சிறப்பாதல் காண்க”. இந் நாவலர் பாரதியாரின் உரையில் மறுப்பும் விளக்கமும் தெளிவும் சிறப்பும் மிளிர்ந்து காணப்படுவது காண்க. இனி, “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்” என்னும் புறத்திணையியல் 20ஆவது சூத்திரத்திற்கு நாவலர் பாரதியார் ஆய்ந்துகூறும் அரிய உரைப்பகுதிகள் தமிழ்நாட்டார் கற்றுத் தெளிய வேண்டியவையாகும். இச்சூத்திர உரைப்பகுதியில் பழந்தமிழ் மரபுகள் யாவை என்பனவற்றை அறிந்து கொள்ள முடியும். தொல்காப்பியர் சுட்டும் செம்பொருள் யாது என்று தெளிந்து கொள்ள முடியும். நாவலர் பாரதியார் 21ஆவது சூத்திரத்திற்கு வாகைத் திணைத்துறை மறவகை ஒன்பதும் அறவகை ஒன்பதும் பதினெட்டு |