பக்கம் எண் :

486 

 [ குறிப்பு : 1975ஆம் ஆண்டு, இந்நூலின் 2ஆம் பதிப்பு வெளியிடும்போது எழுதப் பெற்ற கட்டுரை இது ] 

மெய்ப்பாட்டியற் புத்துரைச்
சிறப்பு

பேராசிரியர் திரு ச. சாம்பசிவனார்எம். ஏ. ,

செந்தமிழ்க் கல்லூரி, மதுரை.

(செயலர், ச. சோ. பாரதியார் கல்வி அறப்பணிக்குழு)

ஆற்றல்சேர் ஆய்வாளர்

‘வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்’தைப் பொறுத்த மட்டில், ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த தெய்வப் புலவர் திருவள்ளுவரைத் ‘திறனாய்வாளர்களின் முன்னோடி’ எனலாம்!

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண்
 மெய்ப்பொருள் காண்ப தறிவு” *

என்ற குறட்பா வாயிலாகத் திறனாய்வின் இன்றியமையாமையைச் சுட்டிக்காட்டுகின்றார் வள்ளுவர் எனலாம்!இவருக்குப் பின், இடைக்காலத்தே வாழ்ந்த உரையாசிரியர்களான இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், கல்லாடர், தெய்வச் சிலையார் போன்றோர் தொல்காப்பியத்திற்கு உரைகண்டதன் வாயிலாகத் திறனாய்வுத் துறையினை ஓரளவு வளர்த்துள்ளனர் எனலாம். மணக்குடவர், பரிமேலழகர் முதலானோரும் திருக்குறளுக்கு உரைவிளக்கம் கூறுமுகத்தான், இத்துறைக்கு ஆக்கமளித்தனர்!இவர்கட்குப்பின்னர், நெடும் பல்லாண்டுகளாகத் திறனாய்வுத்துறை, வளர்ச்சிபெற்றதாகத் தெரியவில்லை. பிற்காலத்தே தோன்றிய மாதவச் சிவஞான முனிவர்,


* திருக்குறள். 423.