பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை487

தொல்காப்பியப் பாயிரத்திற்கும், முதல் நூற்பாவுக்கும் விரிவுரை எழுதியுள்ளார். ‘இலக்கணக் கடல்’ எனப் போற்றப்படும் அரசஞ்சண்முகனாரும் ‘தொல்காப்பியப் பாயிர விருத்தி’ எழுதியுள்ளார். ‘செந்தமிழ்’, ‘தமிழ்ப் பொழில்’, ‘செந்தமிழ்ச் செல்வி’ முதலான இதழ்களில், இலக்கண இலக்கியங்களைப்பற்றி அவ்வப்போது அறிஞர் சிலர், திறனாய்வுக் கட்டுரைகள் எழுதிவந்துள்ளனர். ‘உரையில் ஐயம்’, ‘உரையில் மறுப்பு’, ‘மறுப்புக்கு மறுப்பு’ என ‘இலக்கிய இலக்கண மோதல்கள்’ பல, அறிஞர் பலரிடையே எழுந்தன!எனினும் இவையெல்லாம், திறனாய்வின்பாற்பட்டனவே!இன்று நம்மிடையே பல திறனாய்வாளர்கள் தோன்றித் தமிழன்னையை அணிசெய்து வருகின்றனர். இவர்கட்கெல்லாம் வழிகாட்டுநராக, முன்னோடியாக - ஆற்றல்சேர் ஆய்வாளராக விளங்கியவர் நாவலர் - கணக்காயர் - டாக்டர் ச. சோமசுந்தரபாரதியார் ஆவார்!

புத்துரைப் பொலிவு

பண்டை உரையாசிரியர்களைப் போன்றே நாவலர் பாரதியாரும், தொல்காப்பியத்திற்குப் புத்துரை கண்டுள்ளார். “எழுத்தினும், சொல்லினும்விடப் பொருட்பகுதியில் உரைகாரர், தொல்காப்பியர் நூற்கருத்தைப் பல்காலும் பிறழக்கொண்டு மயங்கினர்” என உணர்ந்த நாவலர் பாரதியார், பொருளதிகாரத்தின் அகத்திணை, புறத்திணை, மெய்ப்பாடு என்னும் மூன்று இயல்கட்கும் முழுமையாகவும் முறையாகவும் உரை வழங்கியுள்ளார். இடையீடுபட்ட நெடும் பல்லாண்டுகட்குப் பின்பு, இங்ஙனம் இயல்கள் வாரியாக உரைகண்ட பெருமை நாவலர் பாரதியார் ஒருவரையே சாரும்!ஆதலின், ‘தொல்காப்பிய உரைகாரர் வரிசையில் இவரும் ஒருவர்’ எனும் உரை சாலவும் பொருந்தும்!

இம்மெய்ப்பாட்டியலுக்கு நாவலர் பாரதியார் காணும் புத்துரைகள் பலவாகும். அவற்றுள், ஒருசில மட்டும் ஈண்டு எடுத்துக் காட்டுதல் சாலும்!

(1)  ‘மெய்ப்பாடு’ என்பதற்கு விளக்கம் கூறவந்த இளம்பூரணர், “அச்சமுற்றான்மாட்டு நிகழும் அச்சம் அவன்மாட்டுச் சத்துவத்தினாற் புறப்பட்டுக் காண்போர்க்குப்