488 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
புலனாகும் தன்மை மெய்ப்பாடென்று கொள்ளப்படும். மெய்யின்கண் தோன்றுதலின் மெய்ப்பாடாயிற்று. அஃதேல், இவ்விலக்கணங் கூத்தினுட் பயன்படல் உண்டாதலின் ஈண்டு வேண்டாவெனின், ஈண்டுஞ் செய்யுட் செய்யுங்காற் சுவைபடச் செய்யவேண்டுதலின் ஈண்டுங் கூறவேண்டு மென்க!” என்பர். பேராசிரியர், “மெய்ப்பாடென்பது பொருட்பாடு. அஃதாவது, உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோர் ஆற்றான் வெளிப்படுதல்” என்பர். நாவலர் பாரதியாரோ, மேற்காட்டிய உரைகளைப் பின்வருமாறு மறுத்துப் புத்துரை காண்கின்றார். (அ) செய்யுள் உறுப்புக்களுள் பொருட்சிறப்பிற்கு மிக்கு உரிமையுடையது மெய்ப்பாடு. (ஆ) எனவே, செய்யுளுறுப்பை விளக்குவதே ‘மெய்ப்பாடு’. (இ)‘மெய்ப்பாடு’ என்பது “அகவுணர்வுகளை ஆழ்ந்து ஆராயாமலே யாரும் இனிதறியப் புலப்படுத்தும் இயற்புறவுடற்குறியாம்! இயற்றமிழ்ச் செய்யுளில் இயற்குறியன்றிச் செற்கைக் குறி புணர்க்கும் வழக்காறில்லை!உணர்வோடு உள்ளக் கருத்தையுரைக்கப் பல செயற்கைக்குறி வகுத்துக் கோடல் கூத்துநூற் கொள்கை யாகும்!பட்டாங்கு மெய்ப்படத் தோன்றும் உள்ளுணர்வை மெய்ப்பாடென்றது ஆகுபெயர். உள்ளுணர்வை உரிய இயற்புறக் குறியால் புலவர் செய்யுளில் புலப்பட அமைத்தல் வேண்டுமாதலின், செய்யுளுறுப்புக்களுள் மெய்ப்பாடு சிறப்பிடம் பெற்றது. அதனை விளக்கும் பகுதி மெய்ப்பாட்டியல்!” என்பது இவர் விளக்கமாகும். “தொல்காப்பியர் இவ்வியலில் விளக்குவது இயற்றமிழ்ச் செய்யுளுறுப்பே தவிரக் கூத்து உறுப்பு அன்று! பேராசிரியர், ‘நாடக நூலாசிரியர்க்கு’ எனக் கொண்டு, ‘சுவை’என்றும் ‘விறல்’ என்றும் கூத்தியற் சொற்களைப் பயன்படுத்துகின்றார். ஆனால் தொல்காப்பியரோ, ‘மெய்ப்பாடு’ என்ற சொல்லையே ஆள்கின்றாரன்றிச் சுவை, விறல் என்பவற்றை யாண்டும் ஆளவில்லை!” என்பது நாவலர் பாரதியார் கூற்றாகும். ‘பண்ணை’ என்பதற்கு “விளையாட்டு ஆயம்” என இளம்பூரணரும், “முடியுடைவேந்தரும் குறுநில மன்னரும் முதலாயினோர் நாடகமகளிர் ஆடலும் பாடலுங் கண்டுங் |