பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை489

கேட்டுங் காமநுகரும் இன்ப விளையாட்டு” எனப் பேராசிரியரும் உரைகூற, நாவலர் பாரதியாரோ, “பண்ணை என்பது, தனிநிலை கருதாமல் ஒருபுறக் குறியால் புலப்படும் இனத் தொகுதி” என்று புத்துரை கூறியதோடு, “இஃது இப் பொருட்டாதல், ‘ஒலித்தன முரசின்பண்ணை’ என்னும் கம்பரின் செய்யுளடியாற்றெளிக” எனச் சான்றும் காட்டுகின்றார்.

உரையாசிரியரும் பேராசிரியரும் ‘வடமொழிக் கூத்தியற் குறிப்புக்களையே தொல்காப்பியர் கூறினார்’ என்னும் பொருள்பட உரை எழுதிப் போந்தனர். “இவர்கள் கூற்று மெய்யெனக் கொள்வோமாயின், தொல்காப்பியரே இதனை வெளிப்படையாகக் கூறியிருப்பாரன்றோ?‘சூத்திரமானது, ஆடிநிழல் போல, நாடுதலின்றிப் பொருள் நனிவிளங்க அமைய வேண்டும்’ என இலக்கணம் வகுத்த தொல்காப்பியரே, படிப்பவர் மருளுமாறு சூத்திரம் அமைப்பாரோ?எனவே, இவ்வுரைகாரர்கள் கூறும் ‘பிறமொழிக் கூத்துநூற் சத்துவங்கள்’ தொல்காப்பியர் இயற்றமிழ்ச் செய்யுளுக்குக் கூறும் மெய்ப் பாட்டுணர்வுகள் ஆகா!” என நாவலர் பாரதியார் விளக்கம் கூறுவது அறிவினுக்கு விருந்தாக அமைகின்றது!

(2)  ‘பண்ணை . . . . நானான் கென்ப’ எனும் நூற்பாவில், ‘நானான் கென்ப’ என்பதற்கு உரைகாரர்கள் ‘பதினாறு’ எனப் பொருள்கொள்வர். ‘சுவை எட்டு; குறிப்பு எட்டு ஆகப் பதினாறு’ என்பது இளம்பூரணர் விளக்கம். “அச்சத்திற்கேதுவாகிய புலியும் பேயும் சுவைப்படு பொருள்; அவற்றைக்கண்ட காலந்தொட்டு நீங்காது நின்ற அச்சம் சுவை; அதன்கண் மயக்கமும் கரத்தலும் குறிப்பு; நடுக்கமும் வியர்ப்புஞ் சத்துவம்” என்பது இவர் உரை. பேராசிரியர், “முப்பத்திரண்டு பொருளும், அவைகருதிய பொருட்பகுதி பதினாறாகி அடங்கும் நாடக நூலாசிரியர்க்கு” என்று உரைப்பர்.

இதற்கு நாவலர் பாரதியார் கூறும் புத்துரை வருமாறு : “இதில் பொருள் முப்பத்திரண்டென ஒருங்கு எண்ணியபிறகு ‘அவைகருதிய பொருட் பகுதி’ எனப் பிரித்துப் பதினாறு எனச் சுட்டுமாறு என்னை?‘பொருள்கள் கருதிய பொருட்பகுதி’ என்பது பொருளில் வெற்றுரையாகும்!” எனப் பேராசிரியர்தம் கூற்றை மறுப்பர்.