பக்கம் எண் :

492நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

அஃதாவது பிள்ளைத்தன்மை, அறிவு முதிராப் பிள்ளைமை; பேதைமை அறிவின்மை (Stupidity);  மடன் - ஏழைமை, அஃதாவது தேராது எளிதில்  நம்பு மியல்பு.  (Simplicity or innocence ) பேதைமை, உவர்ப்பிக்கும்; மடம், உவப்புதவும், எள்ளல் முதல் நான்கும் மகிழ்வொடு மருவும் பெற்றிய” என்பது இவருரை.

(2)  அழுகையின் வகையுள் ‘இழிவு’ என்பதும் ஒன்று. பேராசிரியர் இதனை ‘இளிவே’ எனப் பாடபேதமாகக் கொண்டு உரை எழுதுவர். ‘பிறர்’ தன்னை எளியனாக்குதலாற் பிறப்பது இழிவு’ என்பர் இளம்பூரணர்; ‘பிறரால் இகழப்பட்டு எளியனாதல் இளிவு’ என்பர் பேராசிரியர். ஆனால், மெய்ப்பாடு எட்டனுள் ‘மூப்பு, பிணி, வருத்தம், மென்மை’ என நால்வகைப்படும் ‘இளிவரலும்’ ஒன்றாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், முதற்கண் கூறிய இளிவு அல்லது இழிவுக்கும், பின்னர்க் கூறிய இளிவரலுக்கும் உள்ள வேறுபாடு யாது எனத் தெளிவான உரைவிளக்கம் காணவியலவில்லை. நாவலர் பாரதியார், பின்வருமாறு உரைநயம் காண்பர் : “இளிவு - இழுதகவு; பிறர் இகழ்வாற் பிறக்கும் அவலம்; பழிபிறங்கும் பான்மைத்தாம் இளிவரலன்று!” என்று ‘இளிவு’க்கு விளக்கம் கூறி ‘இளிவரல்’ என்பதற்கு, ‘மானம் குன்ற வருவது’; இளிவரின் வாழாத மானமுடையார், எனவும், ‘இடுக்கண்வரினும் இளிவந்த செய்யார்’ எனவும் வருதலான் இளிவரல் இப்பொருட்டாதல் தெளிக” என விளக்கம் கூறுவர். “முன் அழுகை வகையுள் ஒன்றாகச் சுட்டப்பட்ட இளிவு, அவலிக்கும் அவமதிப்பைக் குறிக்கும். அதுபழிபடு குற்ற மின்றியும் பிற ரிகழ்வாற் பிறக்கும் பெற்றியது; எனவே, இளிவு, தன்னெஞ்சு சுடுதலின்மையால் வாழ்வில் வெறுப்பு விளையாது . . . இச்சூத்திரம் காட்டும் இளிவரல், உயிர்வாழ ஒல்லாமல் மானம் குன்ற வரும் பழிநிலையைக் குறிக்கும்!” என இளிவுக்கும், இளிவரலுக்கும் உள்ள நுட்பமான வேறுபாட்டைக் காட்டுவர் நாவலர்!

(3)  “ஆங்கவை யொருபா லாக” என்ற நூற்பாவுக்கு, “உடைமை முதல் நடுக்கு வரை எவ்வெட்டாய் எண்ணப்படும் உணர்வுகளும் செய்யுட் பொருள் சிறக்க வருவனவுள” என்று கூறி, “இவற்றிடை இன்னுமொரு தன்மை வேறுபாடுமுளது, மெய்ப்பாட்டு வகை எண்ணான்கும் அகப்புறப் பொருட் பகுதிகளிரண்டிற்கு மொப்ப வருபவை. இதிற் குறிக்கும் உணர்வு வகை நாலெட்டும் அகத்துறைக்குச் சிறப்புரிமை பெறுவன. இவை