தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 495 |
புலந்தாள் போல மடிந்தொன்றுமாதலின்’ என்னுமவர் உரைக் குறிப்பால் உணர்க!” இயற்றமிழ் ஏற்றம் இயம்பல் நாவலர் பாரதியார், தம் புத்துரையில் இயற்றமிழின் ஏற்றத்தை இனிது எடுத்து இயம்பும் திறமும் காணலாம். ஒல்லும் வகையான், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழர்தம் பண்டை மரபையும் செல்லும்வாயெல்லாம் சிந்தைமகிழ்வுடன் ஏத்துவது இவர்தம் இயல்பு. “இச்சூத்திரத்தின் செம்பொருள் இதுவாகவும், பேராசிரியரும் பிறரும் ஆன்றதமிழ்மரபும் தெளிசொற் குறிப்பும் முரண உரைகூறி மயங்க வைப்பர். ”“. . . அதனாற் பிறமொழிக் கூத்தியற் கொள்கைகளை இதிற்புகுத்தி இடப்படலாயினர்”; “இவையெல்லாம் ஆரியக் கூத்து நூலார் கோள்களாதலின் அவை இயற்றமிழ் நூலில் இடம் பெறற்கில்லை!. இதுவுமன்றி, இவ்வுரைகாரர் கூறும் ஆரிய நாடக நூற் சத்துவங்கள் தொல்காப்பியர் இயற்றமிழ்ச் செய்யுளுக்குக் கூறும் மெய்ப்பாட்டுணர்வுகள் ஆகா!”“இம்மெய்ப்பாட்டு முறை பிற ஆரியக் கூத்து நூல் வழக்கொடுபடாமல் என்றும் இயற்றமிழ்ச் செய்யுளுறுப்பாய்த் தொன்றுதொட்டு நின்று நிலவும் மரபிற்றாகும் . . . அன்றியும் ஆரிய நூலார் கூறும் நவரசங்கள், இம் மெய்ப்பாடுகளின் வேறாய் நடன நாட்டியச் சத்துவங்களாம். அவை முறையே சிருங்காரம், ஆசியம், கருணை, ரௌத்திரம், வீரம், பயம், குற்சை, அற்புதம், சாந்தம் என்பனவாம் . . . . ‘குற்சை’ என்பது அருவருப்பு. இதனை எனைத்து வகையானும் தமிழ்ச் சான்றோர் செய்யுளில் எஞ்ஞான்றும் உயர்ந்த சுவைதரும் மெய்ப்பாட்டுப் பொருளாகக் கொண்டிலர்!” - இங்ஙனம், இவர் ஏத்துமிடங்கள் பலவற்றை இந்நூலிற் காணலாம். நுண்மாண் நுழைபுலம் நூற்பாக்களை விளக்குமிடத்து, உரையாசிரியர்கள் காட்டும் செய்யுட்களை அப்படியே, மீட்டும் காட்டாமல், சங்க இலக்கியங்க ளினின்றும், பிறவற்றினின்றும் வேறு பல |