பக்கம் எண் :

498 

‘தந்தை’ உரை பற்றித்
‘தனயன்’ உரை

 [குறிப்பு : நாவலர் பாரதியார் இவ்வியலில் ‘இளிவே’ என்பதற்குக் கூறும் உரைபற்றி, அன்னாரின் மகனார் திரு சோ. இலட்சுமிரதன் பாரதியார் கூறும் சிறு குறிப்புரை இது] 

சூத்திரம் 5இல் வரும் ‘இளிவே’ என்பதற்கு இழிதகவு என்ற பொருளும், குறிப்பில் இளிவு-பிறரிகழ்வாற பிறக்கும் அவலம், பழி பிறங்கும் பான்மைத்தாம் இளிவரலன்று, அவ்விளிவரல் அடுத்த சூத்திரம் கூறும் என்றும், சூத்திரம் 6இல்,

“மூப்பே, பிணியே, வருத்தம், மென்மையொடு,
 யாப்புற வந்த இளிவரல் நான்கே”

என்பதில் ‘தொடர்ந்து படரும் மானக்குறை நான்கு வகைத்தாம் என்ற பொருளும், குறிப்பில் ‘இளிவரல்’ மானங்குன்ற வருவது’ என்றும் பிறவும் காணப்படுகின்றன.

சூத்திரம் 6இன், ‘இளி’‘இளிவரின்’ - ‘இளிவந்த’ என்பன மானங்குன்ற வருவதாக மட்டிலுமே கொள்ள வேண்டுமென்பதும், சூத்திரம் 5இல் காணும் ‘இளிவே’ என்பது அத்தகையதல்ல, மானங்குன்றச் செய்யாத பிறரிகழ்வு மட்டிலுமே என்பதும் சரியானதாகத் தெரியவில்லை.

சூத்திரம் 5இல்,

“இளிவே, இழவே, அசைவே, வறுமை என
 விளிவில் கொள்கை அழுகை நான்கே”