தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 499 |
என்பது ஒருவன் தனது விளிவில் கொள்கையால் அந்நான்கிற்கும் பொறுப்பாகலால், அதனால் அவன் மானங்குன்ற நேரலாம் என்பதும், சூத்திரம் 6இல் காணும், மூப்பு, பிணி, வருத்தம், மென்மை ஆகிய நான்கும், அவை தொடர்ந்து படரும் இயற்கை வயத்தால் அவனது பொறுப்பின்றியே நிகழக்கூடுமானதால், அவற்றிற்கு அவன் மானங்குன்ற வேண்டியதில்லை என்பதாகவும், கொள்ளுதல் பொருத்தமானதாகத் தெரிகிறது. சூத்திரம் 5இல், உள்ள ‘இளிவே’ என்பதற்கும், சூத்திரம் 6இல், உள்ள ‘இளிவரல்’ என்பதற்கும் காணக்கூடிய வேறுபாடு, முன்னது ‘விளிவில் கொள்கை’ப் பாங்கினதாகவும், பின்னது, ‘யாப்புறவரும்’ தகைமையானும் இருப்பதாகக் கொள்ளலே சிறக்கும் எனத் தோன்றுகிறது. * * * * * * |