தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 5 |
வடநூன் முடிபுகளின்மையானும். தமிழ்மரபுகள் மொழி வளர்ச்சியின் மெய்வரலாறுகளைக் கருதாமலுரைகாரர் தத்தமக்குத் தோன்றியவாறு வடநூன் முடிபுகளை வலிந்து புகுத்தி இந்நூலொடுந் தம்முள்ளும் மாறுபட்டு வெவ்வேறு பொருள் கூறி மயங்கவைத்த பெற்றிமையும் உற்று நோக்க ஓரளவு வெளியாயிற்று. அதன் பிறகு இருபதாண்டு சென்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் தலைமைபெற்று உயர்வகுப்பு மாணவருக்கு இத்தமிழ்ப் பெருநூற் பொருட்படலம் உரைக்குங்கால். பழைய உரை விளங்காத பலவிடத் தென்புதியவுரை சொல்லி வந்தேன். அக்கழக ஆராய்ச்சிக்கட்டுரை அயன சஞ்சிகையில், விளங்காமல் மயங்கவைக்கும் சில அரிய நூற்பாக்களைப் பழைய உரைகளுடனாய்ந்து நான் கண்ட முடிபுகளை விளக்கி ஒருசில கட்டுரைகள் வெளியிட்டேன். சில கூட்டங்களிலும் நண்பரிடையும் சிலவற்றைச்சொல்லி வந்தேன். உண்மையிலூன்றிய உளச்செல்வரான புலவர் சிலர். பொருட்பகுதிக்கேனும் தொடர்ந்தென் புதியவுரையை எழுதி வெளியிடுமாறு வற்புறுத்தினர். தொடர்ந்திருந்து எழுதிவர உடல் நலமும் பிற துணையும் குறைந்ததனால் இடையிடையே எழுதிய என் குறிப்புகளைத் தொகுத்து வெளியிடத் துணிந்தேன். அகத்திணையியல் முழுவதற்கும் முறையே முதலில் உரையெழுதி முடிந்து அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சிச் சஞ்சிகையில் வெளிவந்தது. அதைப் புத்தக வடிவில் அச்சிட உதவிய தமிழ்ப் புரவலரும், இளசை வளநாட்டு வேந்தருமான மாட்சிமிக்க இராச செகவீர ராம முத்துக் குமார வெங்கடேசுர எட்டப்ப நாயக்க ஐயனவர்களுக்கு அவ்வுரையை அவர்களனுமதி பெற்று உரிமை செய்தேன். அதன்பிறகு, மக்கள் வாழ்வில் பெரும்பகுதியை விளக்கும் புறத்திணையியலுக்கு உரையெழுதி முடித்து வெளியிட முயன்றேன். அதையறிந்தவுடன் அறிவு வளர்ச்சியில் பெரிதும் கருத்துடைய செட்டிநாட்டரசர், மாட்சிமிக்க அண்ணாமலை வள்ளலார் அவ்வுரை வெளியிடும் செலவுக்கு மறு தபாலில் பொருளுதவி ஊக்கினார்கள். அவர்கள் பெருந்தகைமைக்கு அப்புத்துரையை அப்பெரியார்க்குரித்தாக்கி மனமார வாழ்த்துவதன்றி இம்மையில் எம்மனோர் செயற்குரியதெதுவுமுண்டோ? என் மெய்ப்பாட்டியலுரையைப் புலவருக்கும் தமிழ்பயிலும் மாணவர்க்கும் உரித்தாக்கியுள்ளேன். சால்புடைய தமிழ்ப்புலவர் தந்தகவால் என்னுரையை இகழாமல், இந்நூலின் மெய்ப் பொருளாராய்ச்சிக்குத் துணையாந் |