பக்கம் எண் :

8நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

பொது இயல்புகள் அல்லது இலக்கணங்களைத் தம் நூலின் பொருட் படலத்தில் முதற்கண் அகத்திணையியல்- புறத்திணையியல் என முறையே வகுத்தமைத்துப், பிறகு அவற்றுள் அகத்தின் சிறப்பியல்புகளைக் களவியல் கற்பியல் பொருளியல்களில் விளக்கி, அவற்றின் பிறகே அப்பொருள்களை அறியக்கூறும் கருவியாகிய செய்யுளியல்புகளை மெய்ப்பாட்டியல் உவமவியல் செய்யுளியல் எனு மூன்று பகுதிகளிற்கூறி, இறுதியில் செய்யுள் செய்வார் தமிழ் மரபு பிறழாமற் காத்தற்கு வேண்டியனவற்றை மரபியலில் தொகுத்து விளக்கிப் போந்தார்.

இதில் முதற்கண்ணதாய இவ்வகத்திணை யியல் மக்களின் அகவொழுக்கம் அல்லது காதலற வழக்குகளின் பொதுவிலக்கணம் கூறுகிறது. அகமாவது, காதலர் உளக்கிடையும், அவர் காதல் கதிர்த்து வினைப்பட்டு அன்னோர் மனையறவாழ்க்கையிற்றொடர்புறுவதுமாகும். திணையாவது ஒழுக்கம். ஆகவே, அகத்திணை என்பது காதல் கண்ணியஒழுகலாறாம். அவ்வொழுக்கப் பொதுவியல்புகள் கூறும்பகுதி அகத்திணையியலெனப் பெயர் பெற்றது. (அதுவேபோல், புறத்திணையென்பதும் அகவாழ்க்கைக்குப் புறமான மக்களின் சமுதாயத் தொடர்புடைய ஒழுக்கமாகும். அதுபற்றிக் கூறுமிலக்கணப் பகுதி புறத்திணையியலெனப்படும்) திணைச்சொல் முதலில் ஒழுக்கத்துக்கு இயற்பெயர். குறிஞ்சி முதலிய திணைப்பெயர்களும் நிரலே புணர்வு முதலிய ஒழுக்கம் பொருட்டாம். அவை அவ்வத்திணைக்குரிய நிலங்குறிப்பது ஆகுபெயர்நிலையில்; அவற்றின் முதற்பொருள் ஒழுக்கவகையே. இப்பழந் தமிழ் மரபே தொல்காப்பியர் சொல்வது. நாநிலங்களுக்கு ஒழுக்கங்களை வகுத்தனர் என்னாமல், நடுவணதொழிய நடுவணைந்திணை தமக்கு வையநானிலத்தை வகுத்தவாறென இவ்வியற் றுவக்கத்து அவர் விளக்குதல் காண்க. புணர்தல்முதலைந்தும் “திணைக்குரிப்பொருளே” என மீட்டும் கூறும் தொடருமிதனை வற்புறுத்தும். ஒழுக்கம் கருதாமல் நிலம்பற்றித் திணைவகுத்தல் பழமரபுணராது முரணப்படைத்த புது வழக்காம்.

இனி, அவர்காலத் தமிழ் நூல்வழக்கை மேற்கொண்டு அகப்புற வொழுக்கங்களைத் தொல்காப்பியர் முறையே ஒன்றற்கொன்றியைபுடைய எவ்வேழுதிணைகளிலடக்கி யமைத்தார். அவற்றில் அகவொழுக்கங்களை முறையே கைக்கிளை, முல்லை