| ஒருத்தி, செயலமை கோதை நகை ஒருத்தி, 1யியலார் செருவிற் றொடியொடு தட்ப | 35 | ஒருத்தி, ெ்தரிமுத்தஞ் சேர்ந்த (1)2திலகம் ஒருத்தி, 3யரிமா ணவிர்குழை யாய்காது வாங்க ஒருத்தி, வரியா 4ரகலல்குற் காழகம் ஒருத்தி, யரியார் ஞெகிழத் தணிசுறாத் தட்ப | (2) | ஒருத்தி, புலவியாற் புல்லா திருந்தா ளலவுற்று வண்டின மார்ப்ப விடைவிட்டுக் காதலன் றண்டா ரகலம் புகும் |
எ-து: பின்னை அப்படியே உடைந்த, தம்மிலொத்த இணர்களிலே மொய்த்த வண்டுகளெல்லாம் அவ்விடத்து நின்ற அழகினையுடைய மகளிர் நலத்தைக் கைக்கொண்டு நுகர்வனபோல, 5ஒருபடிப்பட மொய்க்கையினாலே அவ்வண்டின் போரிலே அவர்களில் ஒருத்தியுடைய பூமாலையும் பண்ணுதலமைந்த முத்தமாலையும் வேறோருத்தியுடைய அசைதலார்ந்த தொடியோடே தடுத்துக்கொள்ளாநிற்க, ஒருத்தியுடைய நெற்றியிற் றிலகத்தைச் சேர்ந்த தலையிற் கிடந்த தெரிந்த முத்துவடத்தை வேறொருத்தியுடைய அழிகினையுடைய காதிற்கிடந்த அழகுமாட்சிமைப்பட்ட விளங்குகின்ற மகரக்குழை துடக்கிக்கொள்ளாநிற்க, ஒருத்தியுடைய திதலைநிறைந்த அகன்ற அல்குலிற்றுகிலை வேறொருத்தியுடைய உள்ளிடுமணியமைந்த சிலம்பிடத்திற் கிடந்த சுறாவடிவாகியமூட்டுவாயிரும்புகள் (?) தளைத்துக்கொள்ளாநிற்க, ஒருத்திபுலவியாலே கணவனைப் புல்லாதிருந்தவள் வண்டினம் மொய்த்து ஆரவாரிக்கையினாலே 6 வருத்தமுற்று அப்புலவியை நடுவேகைவிட்டுக் கணவன்வணங்குகையினாலே அவனுடைய குளிர்ந்த மாலையையுடைய மார்பிடத்தே முயங்கும். எ - று . 7செயவெனெச்சங்கள் புகுமென்னும் பிறவினை கொண்டன. 42 | ஒருத்தி, யாடிதாழ்(2)கலிங்கந் தழீஇ யொருகை முடிதா ழிருங்கூந்தல் பற்றிப்பூ வேய்ந்த கடிகயம் 8 பாயு மலந்து. |
1. திலகமென்பது சாந்துமுதலியவற்றைக் குழைத்தணியும்நெற்றிக்குறிக் கன்றியும் ஓருணிகலத்துக்கும் பெயரென்று தோன்றுகிறது; 'ஒண்ணுதல் யாத்த திலக வவிரோடை'' கலி.கஎ: கக என்பது அதன் குறிப்பும் பார்க்க. 2. (அ) ''அகிலேந்துகூந்தலொருகையிலொருகையிலேந்தியசைந்தொருகை, துகிலேந்தி'' (தஞ்சை. உஎ.) என்பது (ஆ) ''புதல்வரை யொருகையாற் றழீஇப், (பிரதிபேதம்) 1 இகலார், 2 திலதம், 3 வரிமாண், 4 அகலல்குலிற்காழகம், 5 ஒருபடிப் படிபொய்கையினாலே, 6 வருத்தமுற்ற புலவியை, 7 செய்தெனெச்சங்கள், 8. பாயுமலர்ந்து.
|