யாக; யாஞ் சென்று இவள்கூறும் வார்த்தைகளைக் கேட்டலைச் 1செய்யாமோ என்றாரென்று கூறினாள். எ - று. 9 | எல்லாநீ, என்னணங் குற்றனை யார்நின் னிதுசெய்தார் நின்னுற்ற வல்ல லுரையென வென்னை வினவுவீர் தெற்றெனக் கேண்மி னொருவன் (1) 2குரற்கூந்தா லென்னுற்ற வெவ்வ நினக்கியா னுரைப்பனைத் தங்கிற்றெ னின்னுயி ரென்று மருவூட்டி மாறி யதற்கொண் டெனக்கு மருவழிப் பட்டதென் 3னெஞ்சு | 16 | எங்குந் தெரிந்தது கொள்வே னவனுள் வழி |
எ - து. அங்ஙனங் 4கூறியவள், கேட்கக் கடவேமென்று நும்மிலே கூறி வந்து, ஏடீ! நீ என்ன வருத்தமுற்றாய்? யார்தான் நினக்கு இவ்வருத்தஞ் செய்தார்? நினக்கு உற்ற வருத்தத்தை எங்கட்கு உரையென்று சொல்லி என்னைக் கேட்கின்றவர்களே! அது வந்தவாற்றை என்பக்கலிலே தெளியக் கேண்மின்; ஒருவன் கொத்தான கூந்தலையுடையாய்! எனக்கு உற்ற வருத்தத்தை யான் நினக்கு வந்துஉரைக்குமளவும் என் இன்னுயிர் போகாமற் றங்கிற்றுக்காண் என்று இங்ங்னம் தன்னோடு யான் மருவுருதலை உறுத்தி அம்மருவுதலை அவன் மாறிப் போன அக்காலந்தொடங்கி என்னெஞ்சு 5எனக்கு அவன் மருவின இடத்தே அகப்பட்டு நின்றுவிட்டது; இனி அவனுள்ள இடமெங்குந் தேடித் தெரிந்து என்னெஞ்சினைக் கூட்டிக்கொள்வேன் என்று கூறினாள். எ - று. உரைப்பனை, திசைச்சொல். 17 | (2) பொங்கிரு முந்நீ ரகமெல்லா 6நோக்கினை |
1. “குரற் கூந்தல்” கலி. 72: 20, 93: 22; என இந்நூலுள் வருதல் காண்க: குரலென்பது கூந்தற்கு அடையாய் வருதலன்றியும் மயிர் (கூந்தல்) என்னும் பொருட்டாயும், “குரனாற்றத் துற்ற, முடியுதிர் பூந்தாது” (கலி. 88 : 1 - 2) என்புழி வருதல் காண்க. 2. (அ) கலக்கம் - மனங்கலங்குதல்; மேலே கலங்கி மொழிதலென்பது ஒரு காற் சொல்லின்கண் வந்து பெயர்வது: இது மனங்கலங்கி நிற்கு நிலையென்றுகூறி, “பொங்கிரு முந்நீர்..................தீராயெனின்” என்னும் பகுதியைப் பெருந்திணைக்குரிய கலக்கமென்னு மெய்ப்பாட்டுக்கு (தொல். மெய்ப் சூ. 22 ‘இன்பத்தை’) மேற்கோள்காட்டினர் இளம் பூரணர் (ஆ) நச்சினார்க்கினியர் “பொங்கிரு முந்நீர்..........காட்டீமோ” (பிரதிபேதம்)1செய்யாமோவென்று கூறினாள், 2குரற் கூந்தல், 3நெஞ்சு தெரிந்தது, 4கூறியவர், 5எனக்குத்தான் மருவின, 6நோக்குபு.
|