துறக்கின்றவன் மலையாயிருந்தேயும், விண்ணைத் தீண்டும் மலையிடத்தே தெய்வமகளிர் பந்தடித்த இளைப்புப் போகத் தண்ணிய தாழ்ந்த அருவியிலே 1ஆடுவர் எ - று. இது தகாத தொன்றெனத் தலைவி இயற்பழித்தாள். 26 | ஒடுங்கா வெழில்வேழம் (1) வீழ்பிடிக் குற்ற (2) கடுஞ்சூல் வயாவிற் கமர்ந்து நெடுஞ்சினைத் (3) தீங்கட் கரும்பின் கழைவாங்கு முற்றாரி னீங்கல மென்பான் மலை |
எ - து : தன்னைச்சேர்ந்தாரிடத்துநின்றும் நீங்கே மென்றிருப்பானுடைய மலை, மடிந்திராத அழகையுடைய யானை தான்விரும்பின பிடிக்கு உண்டான முற்பட்ட சூலான் உண்டான வயாநோய்க்கு மனம்பொருந்தி இனிய கண்ணி டத்தே தோன்றின நெடிய கிளைகளையுடைய கருப்பங்கோலைமுறியாநிற்கும், 2எ - று. இது தோழி இயற்படமொழிந்தது. நம்மை முயன்று வரைந்துகொண்டு (4) நம் வயாவிற்குத் தன்மனம் பொருந்தி நாம் 3விரும்புமவற்றைத் தந்து மனக் குறைதீர்ப்பானென உள்ளுறையுவமங் கொள்க.
முல்லை'' (ஃஃ) ''கயமா மலரெனுங் கன்னியை வண்டெனுங் காளை பலபுள், ளியமாமணம்புண ரீர்ந்துறை நாடர்''. என முழுதும் ஒரு புடையும் ஒத்துப் பலவாறாக ஈண்டு அறிதற் பாலன. 1. (அ) ''வீழ்பிடி யளிக்கு, மையல் யானையின்'' கலி. 54 : 13 - 4. (ஆ) ''வீழ்பிடி'' கலி. 53 : 2; அகம். 359 : 10. 392 : 2. 2. கடுஞ்சூல். பெரும்பாண். 395; ஐங். 309, 386, கலி. 110 : 14. 3. (அ) கழையென்பது கோலென்னும் பொருளில் வருதற்கு, ''தீங்கட் கரும்பின் கழைவாங்கும்'' என்பது மேற்கோள்; சீவக. 1064. (ஆ) ''தீங்கழைக் கரும்பே'' மலை. 119. (இ) ''கழைக்கரும்பின்'' புறம். 137 : 4. (ஈ) ''மூரிக் கழைக்கரும்பு'' சூளா. நாடு. 25. (உ) ''தழைக் கரும்பு கண்ணுடைக்குந் தேறல்வழிந் தொழுகுவயற் காசி'' காசி. சாம்பாதித்தன் கதை; 11. (ஊ) ''கழைக்கரும்பு கண்ணுடைத்த சாறடுதீஞ் சுவைவிசயம்'' (எ) ''கழைக்கரும் புடுத்த கவிழ்தலைச் செந்நெற் கழனி'' உத்தரகோச. தீர்த்தச் சிறப்பு. 20; நளசக்கர. 14. 4. மகளிர் வயாவுற்றகாலத்து, அவர் விரும்புமவற்றைத் தந்து அவர் மனக்குறை தீர்த்தல் மரபென்பதை, வாசவதத்தை முதலியவர் உற்ற வயாவை உதயணன் இயக்கன் கூறியவண்ணம் பத்திராவதியின் (பிரதிபேதம்) 1 ஆடுவரிது தகாததொன்றென வியற்பழிந்ததாள், 2என இயற்படமொழிந்தாள் இதுதோழி, 3விரும்புலன வற்றை.
|