பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி237

எனநாம்

31 தன்மலை பாட நயவந்து கேட்டருளி
(1) மெய்ம்மலி யுவகையன் புகுந்தான் புணர்ந்தாரா
மென்முலை யாகங் கவின்பெறச்
செம்மலை யாகிய (2) மலைகிழ வோனே

எ - து : என்று நாம் தன்னுடையமலையைப்பாட மலைகிழவோன் விருப்பம் வந்து கேட்டு மெய்நிறைந்த உவகையனாய் அருளிக் கனவிற் புணர்ச் சியாதலின் முயங்கியமையாத மெல்லிய முலையினையுடைய ஆகம் அழகு பெறும்படி நீ தலைமையுடையையாக வேண்டி வரைவொடு 1புகுந்தான் ; எ- று.

நமக்குப் பேரின்பத்தைத் தருகின்ற இக்களவொழுக்கம் இவட்குத் துன் பத்தைத்ச் செய்தலின் இங்ஙனம் இயற்பழித்தாளென உட்கொண்டுவரைவொடு புகுந்தானாதலின் தலைவி இயற்பழித்தலே வரைவிற்குக் காரணமாயிற்று.

''உயர்மொழிக் குரிய வுறழுங் கிளவி, 2யையக் கிளவி யாடூஉவிற் குரித்தே'' (3) என்பதனால் தோழி உறழ்ந்துகூறினாள்.


உதவியால் தீர்த்தன னென்பதனால் அறிக. பெருங். (5) 1. வயாக்கேட்டது - 4. வயாநோய் தீர்ந்தது. வயா - கருவுற்ற மகளிர்க்கு அக்காலத்துளதாகும் வேட்கைப் பெருக்கம்; மசக்கையென வழங்கும்.

1. (அ) ''மனையிற் புகுதரு, மெய்ம்மலி யுவகையன்'' அகம். 272 : 11 - 12. (ஆ) ''நுமக்கே, மெய்ம்மலி யுவகை யாகின்று'' நற். 43 : 6 - 7. (இ) 'மெய்ம்மலிந் தானா வுவகையே மாயினேம்'' அகம். 262 : 12- 3. (ஈ) ''மெய்ம்மலி யுவகை செய்யும்'' புறம். 45 : 9. மெய் மலி உவகை - உடம்பு பூரித்தற்குக் காரணமாகிய மகிழ்ச்சி.

2. (அ) ''ஆவோ வாகும் பெயருமா ருளவே, யாயிட னறிதல் செய்யு ளுள்ளே'' (தொல். பெயரி. சூ. 41.) என்பதன் விசேடவுரையில், ''ஆன் ஆள், ஆர், என்னுமீற்றவாகிய பெயரல்லது, சேரமான், மலையமான் என்னுந்தொடக்கத்தன அவ்வாறு திரியாமையின், ஆயிட னறிதலென்றார். உழா அன், கிழாஅன் என்பனவோவெனின்;- அவை அன்னீற்றுப்பெயர் ஒருமொழிப் புணர்ச்சியான் அவ்வாறு நின்றனவென்பது. ஆனீறாயவழி, உழவோன், கிழவோன் எனத் திரியுமாறறிக. என்று சேனாவரையர் எழுதியிருத்தலும், (ஆ) ''கிழவன் 'மலைகிழவோனே' என அகரம் ஒகாரமாகி ஒரோரிடத்து வருதலும்...................கொள்க'' என்று (நன். பொது. சூ. 2) இராமாநுச கவிராயர் எழுதியிருத்தலும் இங்கே அறிதற்பாலன.

3. தொல். பொருளி. சூ. 44.

(பிரதிபேதம்) 1 புகுந்தான்காணென வரைவுமலிந்தமைகூறினாள், 2 ஆடூஉக்குரித்தே.