பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி239

னீரத்து ளின்னவை தோன்றி னிழற்கயத்து
ணீருட் குவளைவெந் தற்று;
32மணிபோலத்தோன்று மணிபோலத் தோன்று
மண்ணா மணிபோலத்தோன்றுமென் மேனியைத்
துன்னான் றுறந்தான் மலை;
35துறக்குவனல்லன் றுறக்குவ னல்லன்
றொடர்வரை வெற்பன்றுறக்குவ னல்லன்
றொடர்பு ளினையவை தோன்றின் விசும்பிற்
சுடரு ளிருடோன்றியற்று;
எனவாங்கு;
40நன்றா கின்றாற்றோழிநம் வள்ளையு
ளொன்றிநாம் பாட மறைநின்றுகேட்டருளி
மென்றோட் கிழவனும் வந்தன னுந்தையு
மன்றல்வேங்கைக்கீ ழிருந்து
மணநயந் தனனம் மலைகிழ வோற்கே.

இஃது இருவரும் இவ்வகையாற் பாடிய வள்ளைப்பாட்டுத்தலைவன் சிறைப்புறமாகக் கேட்டு, வரைவுவேண்டி விடத், தந்தையும் வரைவுடம்பட்டமை தோழி தலைவிக்கு உரைத்தது.

இதன் பொருள்.

(1) பாடுகம் வாவாழி தோழி (2) வயக்களிற்றுக்
கோடுலக்கை யாகநற் சேம்பி னிலைசுளகா
வாடுகழை 1நெல்லை யறையுரலுட் பெய்திருவாம்
பாடுகம் வாவாழி தோழிநற் றோழிபா டுற்று

1. (அ) 'பாடுகம் வாவாழி தோழி' என்பது தன்மைப் பன்மை வினை முற்றில் அம்மீறு வருங்கால முணர்த்தி வருதற்கும் தொல். வினை. சூ, 5. நச். (ஆ) ககரம் சிறுபான்மை எதிர்காலம் காட்டிவருதற்கும் இ - வி. சூ. 49. நன். பத. சூ.17; இரா. மேற்கோள். (இ) "பாடுகம் வாவாழி தோழியாம் சிலப். (24).

2. (அ) "கொல்யானைக் கோட்டால் வெதிர்நெற் குறுவாநாம்வள்ளையகவுவம் வா" கலி. 42: 7 - 8. (ஆ) "வஞ்சி மகளிர் குறுவரே வான் கோட்டால்" சிலப். 29. (இ) "யானை வெண்மருப் புலக்கை யறை யுரல்" சீவக. 1562. (ஈ) "ஏனற்குறவ ரிருங்குடிச் சீறூர், மானமர்

(பிரதிபேதம்) 1 நெல்லறை.