பக்கம் எண் :

240கலித்தொகை

எ - து : தோழீ! வாழ்வாயாக, நாம்பாடுவேமாக வா; எங்ஙனம் 1பாடுவே மென்னின், வாழ்வாயாக தோழி! இருவரும் அசைகின்ற மூங்கிலினது நெல்லைப் பாறையாகிய உரலிலே பெய்து, வலியினையுடைய யானைக்கொம்பு உலக்கை யாகக் குற்று, நல்ல சேம்பினது இலை சுளகாகப் புடைத்துப் பாடுவோமாக; எ-று.

வாவென முன்கூறியதனைப் பின்னர் விசேடித்துக் கூறினாள். இதில், நற்றோழியென நின்று மலைகெழு வெற்பனைப்பாடுகம் வாவென மேல்வருகின்ற உறுப்போடுங் கூட்டுக.

செய்தெனெச்சங்கள் எதிர்காலத்துப்பிறந்த செயவெனெச்சங்களாம்.

உயர்ந்த மூங்கிலின் நெல்லுத் தானே உதிர்ந்ததனை எடுத்துக்கொண்டு உரலிற்பெய்தென்றதனால் உயர்ந்த தலைவனைத் தெய்வந் தானே கொண்டு வருதலின் 2அவனை நம்வயத்தனாக்கினேமென்றும், வள்ளைப்பாட்டிற்கு ஏது வாகிய கோடு உலக்கையாக என்றதனாற் கோடு நெல்லைப் பயன்படுத்தினாற் போல 3நம் வரைவுகடாவலால் இத்தலைவனை இல்லறப்பயனை எய்துவிக்கின் றேமென்றும், சேம்பிலே, புடைத்தற் றொழிலை முற்றமுடித்து (1) அரிசியை ஆக்காகதன்மைபோல இக்களவொழுக்கத்தால் அவன் வரைந்து கோடலை முற்றமுடியாதிருக்கின்றேமென்றும் இறைச்சி பொருட்புறத்தாய் நின்றவாறு காண்க.


நோக்கின் மகளிரொடு மரீஇ, வெங்கண்மறவர் வில்லின்வீழ்த்த,பைங்கண் வேழத்துப் பணைமருப் புலக்கையினறையுர னிறைய வைவனப் பாசவ,லிசையொடு தன்னைய ரியல்புபுகழ்ந் திடிக்கு,மம்மனை வள்ளை யின்னிசைகேட்டும்" பெருங். (2) 14: 46 - 52. (உ) "பைம்பொ னறைமேற்.............................வான்கேழ் மருப்போச்சி,யம்பொன் மலைசிலம்ப வம்மனை வள்ளையுடன்,கம்பஞ்செய்யானைக் கரியவனைப் பாடினார்" சூளா. சுயம். 106. (ஊ) "பளிக்குரல் வேய்நெற் படுத்திபக் கோடுபற்றிச் செழுந்தேன், றுளிக்குமென் கூந்தலர் வள்ளையி னோச்சுமை சூழ்சிலம்பா" தணிகைப். களவுப்படலம். 330.

(எ) வயவென்னு முரிச்சொல்வலியென்னும்பொருளில் வருதற்கு'வயக்களிறு' என்பது மேற்கோள். தொல். உரி. சூ. 54. 'வய்வலி' தெய்.

1. சேனாவரையர், 'கிளவியாக்கம்' என்பதன் பொருளை விளக்குமிடத்து "வழுக்களைந்து சொற்களை யாக்கிக்கொண்டமையான், இவ்வோத்துக் கிளவியாக்கமாயிற்று. ஆக்கம் - அமைத்துக்கோடல், நெய்யும் நுறுங்குங்களைந்து அரிசியமைத்தாரை அரிசியாக்கினா ரென்பவாகலின்" என்று எழுதியிருத்தல் இங்கே அறிதற்பாலது.

(பிரதிபேதம்) 1பாடவென்னின், 2அவனைவயத்த, 3நாமும் வரைவுகடவுசலிற்றலையனை.