இது வரைவுநீட ஆற்றாளாயினவிடத்துத் தோழி தானுந் தலைவியும் வள்ளைப்பாடலுள் முருகனைப் பாடுவார்போல இருவர்க்கும் ஏற்பத் தலைவனைப்பாடத் தலைவி ஆற்றினமை 1தோழி தன்னுள்ளே கூறுவாளாய்த் தலைவன் சிறைப்புறமாகக்கூறியது. இதன் பொருள். (1)வேங்கை தொலைத்த வெறிபொறி (2)வாரணத் தேந்து மருப்பி னினவண் டிமிர்பூதுஞ் சாந்த மரத்தி னியன்ற வுலக்கையா (3)லைவன வெண்ணெ(4) லறையுரலுட் 2பெய்திருவா மையனை யேத்துவாம் போல வணிபெற்ற (5)மைபடு சென்னிப் (6) பயமலை நாடனைத் தையலாய் பாடுவா நாம்
1. யானைவேங்கைப்புலியைத் தொலைத்தலுண்டென்பதை,இந்நுாற்பக்கம் 251 : 1- ஆம் குறிப்பாலுணர்க. 2. (அ) "யானை வெண்மருப் புலக்கை யறையுர லைவன மிடித்த" சீவக. 1562. (ஆ) யானைக்கொம்பை உலக்கையாகக் கொள்ளுதல் இந்நூற் பக்கம் 239: 2 - ஆம் குறிப்பாலும் உணரப்படும். 3. ஐவனம், குறிஞ்சி நிலத்துக்கு உரியதென்றும் இது தினையைப் போலவே குறிஞ்சிநில மாக்களால் பயிர் செய்யப்படுவதென்றும் அருவி நீரால் விளைக்கப்படுவதென்றும், குறிஞ்சி நிலமகளிரால் விளைவின்கண் காக்கப்படுவதென்றும் பண்டை நூல்களிற் கூறப்பெற்றுள்ளது. "தேனுகு மடையை மாற்றிச் செந்தினைக் குறவர் முந்தி,வானநீ ராறுபாய்ச்சி யைவனம் வளர்ப்பர் மாதோ"என்று (கம்ப. வரைக்காட்சி. 34.) கம்பர் புனைந்துரைத்தனர். இதனோடு தினையும் கலந்து விதைக்கப்படுமென்பது புறம். 159-ஆம் செய்யுளுரையால் தெரிகிறது. "மைபடு மால்வரை பாடினள் கொடிச்சி,யைவன வெண்ணெல் குறூஉ நாடனொடு" என ஐவனவெண்ணெல் ஒண்றென்றெண்ணும்படி கூறும் நற்றிணை. ஐவனமும் வெண்ணெல்லும் வெவ்வேறென்னும், மலைபடு கடாத்தினுரை. 4. "அறை யுரல்" கலி. 41 : 3, சீவக. 1562. பெருங். (2) 14 : 50; சூளா. சுயம். 106. 5. (அ) "மைபடு மால்வரை" நற். 373 : 3. (ஆ) " மைபடு சிலம்பின்" குறுந். 371, பரி. 16 : 2. (இ) "மைபடு குடுமிய குலவரை" பரி. 15 : 9 - 10. 6. (அ) "பயமலை நாடன்" குறுந். 143; (ஆ) "பாடிமி ழருவிப் பயமலை" மணி. 17 : 50. (பிரதிபேதம்) 1தன்னுள்ளே, 2 பெய்திருவேம், பெய்திருவம்.
|