எ -து; தையலாய் ! நாம் இருவேமும் ஐவனமாகிய வெண்ணெல்லைப் பாறையாகிய உரலிலே சொரிந்து, புலியைக் கொன்ற 1மதத்தான் மயங்கின புகரையுடைய யானையினது தலை யேந்தின கொம்பாலும் இனமான வண்டுகள் ஒலித்துத் தாதை ஊதுஞ் சந்தனமரத்தினாலும் பண்ணின உலக்கைகளாலே குற்று, முருகனைப் புகழ்வேம்போலே அழகுபெற்ற மேகம் உண்டாகின்ற தலைமையினையுடைய பயனையுடைத்தாகிய மலைநாட்டையுடையானைப் 2பாடுவேம்; எ - று. பாடுவாமென்னும் பொருளே பயப்பச் 3செய்தலின் இறைச்சியிற் பிறந்த பொருள் காண்க. இஃது "இறைச்சியிற் பிறக்கும் பொருளு ................... மோர்க்கே" (1) என்பதனாற் கொள்க. இஃது இரண்டு உலக்கையாலும் பயன்கொண்டாற்போல அவன் பெயர்பாடுதலாற் பயன் கொள்ளாமையில் உள்ளுறையுவமமன்மை உணர்க. 8 | (2)தகையவர் கைச்செறித்த தாள்போலக் காந்தண் முகையின்மேற் றும்பி யிருக்கும் பகையெனிற் |
1. தொல். பொருளி. சூ. 36. இச்சூத்திரத்தினுரையில் இவ்வுரையாசிரியர், இறைச்சியிற் பிறக்கும்பொருளுக்கு "வேங்கை....................பாடுவா நாம்" என்பதனை மேற்கோள்காட்டி 'இதனுட் புலவுநாறியும் பூநாறியுந் தீதும் நன்றுமாகிய இறைச்சியாகிய உலக்கைகளாற் றலைவனைப்பாடும் பாட்டோடே கலந்து கூறத்தகாத தெய்வத்தையும் பாடுவாமென்னும் பொருள் பயப்பச்செய்த இறைச்சியிற் பொருளே பயந்தவாறும் இரண்டுலக்கையானும் பயன்கொண்டாற் [போல் அவை அன்பே] (போல ஐயன்பேர்) பாடுதலாற் பயன் கொள்ளாமையின் உள்ளுறையுவம மன்மையுங் காண்க' என்று எழுதியிருக்கிறார். 2. (அ) "மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தண் மெல்விரல்கள், பயிர்வண்டின் கிளைபோலப் பன்னரம்பின் மிசைப்படர" என (சிலப். 7 : 10 - 11.) இவ்வுவமை ஒருவாறாக மாறிவந்திருத்தல் இங்கு ஒப்பு நோக்கற்பாலது. (ஆ) இவ்வணிகலத்துக்குள்ள தாள், தாழ், தாட்கூட்டு, தாள்செறியென்னும் பெயர்களை நோக்கின், இது முதலிற் காலணியின் பெயராயிருந்து பின்பு கைவிரலணிக்கும் வழங்கியிருக்குமென்று தோற்றுகிறது. (இ) "வாள்புரை விழியாயுன் மலரடி யணிமானத்,தாள்புரை தளிர்வைகுந்தகை ஞிமிறிவைகாணாய்" என்று (கம்ப. வனம். 17.) கம்பர் கூறியிருத்தலும் நோக்கத்தக்கது. இது கைவிரலணிக்கும் நெடுநாட்குமுன்னே வழங்கப்பெற்றதென்பது. (ஈ) "கொடுங்குழை (பிரதிபேதம்) 1புகரை, 2 பாடுவேமென்றாள், வெறிவாரணம் - மதத்தான்மயங்கின வாரணம், பாடுவாமென்னும், 3 செய்தல் இறைச்சியிற்.
|