பக்கம் எண் :

260கலித்தொகை

(1) கூற்றம் வரினுந் தொலையான்றன் (2) னட்டார்க்குத்
தோற்றலை நாணோதோன் குன்று

எ - து; பகையென்றுகூறிற் கூற்றுவன் எதிர்வரினுங் கெடானாய்த் தன்னை உறவு கொண்டார்க்குத் தோற்றலைநாணாதவனுடைய மலை, (3) தும்பி அழகினை


பெய்த செ[ழு]ஞ்செவிப் பேதை, சிறுதாழ்செறித்த மெல்விரல்சேப்ப, வாளையீர்ந்தடி வல்லிதின் வதைஇப்,
புகையுண் டமர்த்த கண்ணள்" நற். 120 : 3 - 6. (உ) "மரகதத் தாள்செறி, காந்தண் மெல்விரல் கரப்ப வணிந்து" சிலப். (6) 97 - 8. என்பவற்றாலும் விளங்கும்.

1. (அ) "கூற்றுவெகுண்டு வரினு மாற்றுமாற் றலையே" பதிற். 14 : 10. (ஆ) "கூற்றுடன்று மேல்வரினுங் கூடி யெதிர்நிற்கு, மாற்றலதுவே படை" குறள். 765. (இ) "அருநவை நமனுமாற்றான்" சீவக. 1114.
(ஈ) "கூற்றுவன் றன்னொடிவ் வுலகங் கூடிவந், தேற்றன வென்னினும் வெல்ல வேற்றுள,
மாற்றவன்றம்பி"(உ) "கூற்றையுங் கட்பொறி குறுகக் காண்பரே, லூற்றுறுகுருதியோ டுயிருமுண்பரால்"
கம்ப. விபீடணனடை. 68. இலங்கை கேள்விப். 22. (ஊ) "மாமறலிநேர் வரினுந்,தோற்க லாதவர் மூவருந் தம்முயிர் தோற்றார்" வில்லி. பதினான்காம்போர். 118.

2. (அ) "நட்டார்க்குத்தோற்றலை நாணாதோன்"என்பதனை 'அதற்கு வினையுடைமையின்' என்னும் நான்காம் வேற்றுமையை முடிக்கவரும் பொருள்வேறுபாட்டுச் சூத்திரத்து 'அப்பொருட்கிளவியும் அதன்பால' என்பதற்கு மேற்கோள் காட்டினர், நச்சினார்க்கினியரும் வேறொரு வரும்; (ஆ) சேனாவரையர் 'நட்டார்க்குத் தோற்கும்' என இதனை உரைநடையாக எடுத்துக் காட்டினர்; தொல். வேற்றுமை. சூ. 15. (இ) "ஆதியென்றதனானே..........................'நட்டார்க்குத் தோற்றலை நாணாதோன்' என்பனபோல இதற்கு இதுவென்பது படவருவன பிறவுங்கொள்க' என்பர்,இ-வி, உரையாசியர்; இ - வி. சூ. 201. (ஈ) "வன்பிற்றளரார் நட்டார்க்கு மடங்கித் தோற்ற னாணாரே' விநாயக. அரசியற்கை. 146.

3. தும்பி கரு நிறமுடைத்தாதல்பற்றி "நீலக்கடைச்செறி" என்றார். இந்நூற்பக்கம் 160 : 2 - ஆங்குறிப்பும் "மணிநிறத்தும்பி" கலி. 46 : 2. என்பதும் அதன் குறிப்பும் "மணிச்சிறைத் தும்பி" குறுந். 392. என்பதும்
"தும்பி, யரியினங் கடுக்குஞ் சுரிவண ரைம்பால்" என்று (அகம். 223. 11 - 2) கருங்கூந்தற்குத் தும்பி உவமையாக்கப் பெற்றிருத்தலும்"நிறங்கருகித் தும்பி பாய்ந்துகைத்தனவே" (சீவக. 1228) என்புழி 'இயல்பாகக் கருகினவேனும் இவ்வருத்தத்திற்குக் கருகியென்றார்' என்றெழுதியிருக்கும்விசேடவுரையும் இங்கே அறிதற்பாலன.