பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி261

யுடைய (1) மகளிர் கையிலிட்ட தாட்கூட்டாகிய நீலக்கடைச்செறிபோலக்(2) காந்தளினது முகையின்மேலே அஃது அலருங்காலம் பார்த்திருக்கும்;எ - று.

என்பதனால், நஞ்சுற்றத்தார் மனநெகிழ்ந்து வரைவிற்கு உடம்படுங் காலம் 1பார்த்திருக்கின்றானென்றாளாக உள்ளுறையுவமங் கொள்க. இது பயவுவமப்போலி. போலவென்னும் ஏனையுவமம் இதற்குச் சிறப்புக்கொடுத்து


1. மகளிர்கைக்குக் காந்தள் உவமையாகக் கூறப்படுதலை கலி, 59. 3 - 4-ஆம் அடிக்குறிப்பிற்காண்க; கையென்றது விரலையெனின் (அ) "நெடுவரைமிசைஇய காந்தண்மெல்விரல்" (ஆ) "செழுங்குலைக் காந்தள் கைவிரல்பூப்பவும்" (இ) "விரலே...........................காந்தளங் கொழுமுகை போன்றன" (ஈ) "காந்தண் முகைபுரை விரலின்" (உ) "காந்தண் முகிழ்விரலாற் கண்ணியுங் கைதொடாள்" (ஊ) "காந்தளஞ் செம்முகைகை,
விரலென்றுகொல் செறித்தார்" (எ) "காந்தண் மென் முகையின் முகிழ்விரல் குவித்து"என்பன ஒப்புநோக்குக.

2. (அ) "அகலிளைக்காந்த ளலங்குகுலைப்பாய்ந்து,பறவையிழைத்த பல்கணிறாஅற், றேனுடை நெடுவரை" நற். 185 : 8 - 10. (ஆ) "காந்த, ணறுந்தா தூதுங் குறுஞ்சிறைத் தும்பி" குறுந். 239. (இ) "நாறுகுலைக் காந்தட், கொங்குண் வண்டின்" ஐங். 226.(ஈ) "காந்த, ளணிமலர் நறுந்தா தூதுந் தும்பி"(உ) "காந்தட், கொழுமடற் புதுப்பூவூதுந் தும்பி" அகம். 108 : 15 - 6, 138 : 178. (ஊ) "கல்லோங் குயர் வரைமேற்காந்தண்மலராக்காற்,செல்லாவாஞ்செம்பொறி வண்டினம்" நாலடி. 283. (எ) "குலையுடைக் காந்த ளினவண் டிமிரும்,வரையக நாடனும்" ஐந்திணையெழு. 3. (ஏ) "நானிறச் சுரும்பும் வண்டு நன்மணி யணியிற் சாரத்,தேனுக மலர்ந்து சாய்ந்த சேயிதழ்க் காந்தட் செம்பூ" கம்ப. கார்கால. 26. (ஐ) "பொன்மணி வண்டுவீழ்ந்த காந்தளம் போது போல" திருவிளை. திருமணப். 159. எனக் காந்தளில் வண்டு மொய்ப்பதாகக் கூறுதல் காண்க. (ஒ) "சுரும்பு மூசாச் சுடர்ப்பூங்காந்தள்" முருகு. 43. என்பதன் அமைதி 'தான் விரும்புதலின்' எனப் பெய்துரைத்த அதனுரையால் அறியலாகும். (ஓ) "நெருப்பவிர்ந்தனைய காந்த ணிரைநிரை மலர்ந்து நிற்பச், சுருப்பின நெருப்பென் றெண்ணித் தூரத்தே யகலுங்காட்சி, பருப்பதச் சிலைக்கைநாதன் பயந்தவன் முடிக்க ணேற,விருப்பன வென்று மூசா திடையொழிந் தகல்வ போன்ற" என்பதும் அதுவே. (ஒள) "மலர்ந்த காந்தண் மாறாதூதிய,கடும்பறைத் தும்பி சூர்நசைத் தாஅய்ப்பறைபண் ணழியும் பாடுசா னெடுவரை" என்பதும் இங்கே அறிதற்பாலது.

(பிரதிபேதம்) 1 பார்த்திருக்கின்றாரென்றாளாக.