பக்கம் எண் :

262கலித்தொகை

நின்றது. (1) தொலையாமையுந்(2) தோற்றலை நாணாமையும் முருகனுக்கு 1உளவாகல் புராணங்களான் உணர்க.

12 2வெருள்புட னோக்கி வியலறை யூக
மிருடூங் கிறுவரை யூர்பிழி பாடும்
(3) வருடைமான் குழவிய வளமலை நாடனைத்
தெருளத் தெரியிழாய் நீயொன்று பாடித்தை

எ - து; தெரிந்த இழையினையுடையாய் அகற்சியையுடைய பாறையிலிருந்த கருங்குரங்கைச் சேரவெருண்டுபார்த்து இருள்செறிந்த பக்க மலையிலே ஏறி இறங்கி ஆடும் வருடைமானின் குழவிகளையுடையனவாகிய வளப்பத்தையுடைய மலைநாடனை விளங்க நீ ஒன்று பாடுவாயென்றாள்;எ - று.

(4) பாடித்தை, முன்னிலை வினைத்திரிசொல்;வருடைமான் குழவி தன் இளமையான் வெருளத்தகாத யூகத்தை வெருண்டாற் போல 3நீயும் நஞ் சுற்றத்தார் வரைவிற்குஉடம்படாரோவெனக் கருதிச் சுற்றத்தாரை வெருளாநின்றாய்; அது தகாதெனக் கூறினாளென உள்ளுறையுவமங்கொள்க. இது வினையுவமப்போலி. "தவலருஞ் 4சிறப்பினத் தன்மை நாடின், வினையினும் பயத்தினு


1. (அ) "ஓங்குவிறற் சேஎ,யாரா வுடம்பினீ யமர்ந்துவிளை யாடிய,போரால் வறுங்கைக்குப் புரந்தர னுடைய..........................திருந்துகோன் ஞமன்றன் மெய்யிற் பிரிவித்,திருங்கண் வெள்யாட் டெழின்மறி கொடுத்தோன்"பரி. 5 : 54 - 62 என்பதனாலும்(ஆ) "இவ்வாறமரர் பொருமெல்லையி லீசன் மைந்தன்..................ஐவாளியினாற் சமனாற்ற லடக்கி னானால்" கந்த. திருவிளை. 56. என்பதனாலும் தொலையாமை விளங்கும்.

2. இது குறிக்குஞ்செய்தி, தந்தையாரை வலம்வந்து தமையனார் முன்பு பழம்பெற இவர் உலகுசூழ்ந்து பின்புவந்தனரென்பதோ, வள்ளிநாயகியாரால் மாலைகொண்டு இவர் கைபிணிக்கப் பெற்றனரென்பதோ, உடன்பயின்ற மழுவா ணெடியோன் குருகுபெயர்க் குன்று துளைக்க இவர் ஆற்றியிருந்தனரென்பதோ, வேறியாதோ, புராணம் வல்லார் வாய்க்கேட்டுணர்க.

3. (அ) குழவியென்னும் இளமைப்பெயர் வருடைக்கும் வருமென்பதற்கு ”வருடைமான் குழவிய வளமலைநாடனை" என்பதுமேற்கோள்; தொல். மரபு. சூ. 18 நச். சீவக. 355-ஆம் செய்யுளின் உரையும்பார்க்க. (ஆ) குழவியென்பது வருடைக்குமுரிய மரபுப்பெயரென்பர் மயிலை நாதர். நன். பொது. சூ. 37. (இ) கலி. 50 : 21 - 2. பார்க்க. (ஈ) வருடையின் செய்தியை கலி. 50 : 4-ஆம் அடிக் குறிப்பிற் காண்க.
4. பாடித்தை கலி. 40 : 10.

(பிரதிபேதம்) 1 உளதாகல், 2 வெறான்புடைநோக்கி, 3 நீ நஞ்சுற்றத்தார்,4 சிறப்பிற்றன்மை.