பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி263

முறுப்பினு முருவினும், பிறப்பினும் வரூஉந் 1திறத்த வென்ப" என்னும் (1) உவமவியற் சூத்திரத்தில் 'திறத்த' என்றதனால் தலைவன் நாட்டிலுள்ளன கூறித் தலைவிக்கேற்ற உவமைதோன்றச் செய்தலுங் கொள்கவென்றார்.

19 நுண்பொறி (2) மான்செவி போல (3) வெதிர்முளைக்
கண்பொதி பாளை கழன்றுகும் பண்பிற்றே
(4) மாறுகொண் டாற்றா ரெனினும் பிறர்குற்றங்
கூறுத றேற்றாதோன் குன்று

எ - து; செல்வமுதலியவற்றொடு மாறுகொண்டு அவற்றைப் 2பொறாதிருப்பரென்று பலருங் கூறினும் பிறர் குற்றத்தைக் 3கூறுதலை அறியாதவன் குன்று நுண்ணிய பொறியையுடைய மானினுடைய செவியைப்போல மூங்கின் முளையினது கண்ணைப்பொதிந்த பாளை கழன்றுவிழும் பண்பினை யுடைத்தெனத் தலைவி கூறினாள்; எ - று.

இதனால் அவன் வரையாமையின் நம்மேனியிற் றோன்றிய வருத்தமும் நீங்கி நம் மேனியும் இனிப் பொலிவுபெறுமெனக் கூறினாளாக உள்ளுறை யுவமங்கொள்க. இஃது உருவுவமப்போலி. குற்றங் கூறுதல் தேற்றாதானெனவே நாஞ்செய்த தீங்குகளையும் காணானென்றாள். முருகனும் திருமேனிகொண்டு திரிதலின் அவற்கும் குற்றங்கூறாமை 4ஏற்றினாள். மேல் தோழிகூறுகின்றாள்.

20 புணர்நிலை(5)வளகின் குளகமர்ந் துண்ட
(6) புணர்மருப் பெழில்கொண்ட வரைபுரை செலவின்
வயங்கெழில் யானைப் பயமலை நாடனை
(7) மணநாறு கதுப்பினாய் மறுத்தொன்று பாடித்தை

1. தொல். உவம. சூ. 25.

2. "விழிக்கு டைந்தமான் செவிகண்மெல் லியனல்லார் தடிந்தவ், வுழிக்க ஞற்றியாங் குயர்பணை கண்பொதி பாளை,கழிக்கும்" தணிகை. திருநாட்டுப். 37.

3. "எழாநெற், பைங்கழை பொதிகளைந் தன்ன விளர்ப்பின், வளையில் வறுங்கை" புறம். 253 : 3 - 5.

4. "மாறுகொண் டோரா மனத்தின ளாகி" மணி. 23 : 143.

5. "இளகு காழகிற் சந்தனப் பொதும்பரெவ் விடனும், வளகு மேய்ந்து சேவகங்கொளு மாமத மொழுக்கும்"
தணிகை. திருநாட்டு. 39.

6. "புணர்மருப் பியானை" சீவக. 1621. "யானைப் புணர்மருப்பு" சீவக. 2081, 2111.

7. "அரிவை கூந்தலி, னறியவு முளவோ" குறுந். 2.

(பிரதிபேதம்) 1திறத்தியல், 2பெறாதிருப்பர், 3கூறுதலறியாதவன், 4ஏற்றினான் புணர்நிலை.