பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி267

ததிரிசை யருவிதன் னஞ்சினை மிசைவீழ
(1) முதிரிண ரூழ்கொண்ட (2) முழவுத்தா (3) ளெரிவேங்கை
(4) வரிநுத லெழில்வேழம் பூநீர்மேற் சொரிதரப்
புரிநெகிழ் (5) தாமரை மலரங்கண் வீறெய்தித்
திருநயந் திருந்தன்ன தேங்கமழ் (6) விறல்வெற்ப.

எ - து; எதிரே எதிரேஓங்கிய பெருமையையுடைய மலையினது அகற்சியை யுடையசாரலில் (7) இளஞாயிற்றினுடைய விரிகின்ற செறிந்தகிரணங்களினுடைய அழகைத் தன்னிடத்தேகொண்ட மாணிக்கப்பாறையிலே நிற்கப்பட்டு முழங்குகின்ற ஓசையையுடையவாய் இரண்டுமலையினின்றும் வீழ்கின்ற


1. (அ) "முதிரிணர்" (ஆ) "முதிர்கோங்கின் முகை" கலி. 56 : 2, 23. (இ) "முதிர்மலர்" பெருங். (4) 5 : 48.

2. (அ) "முழாவரைப்போந்தை" (ஆ) "முழாஅரைப் போந்தை" (புறம். 85 : 7. 375 : 4.) (இ) “வேம்பின் முரரை முழுமுதல்" (பதிற். 5-ம் பதி. 13 - 4) என மரத்தினடிக்கு முழவு உவமிக்கப்படுதல் காண்க.

3. (அ) "எரியகைந் தன்ன வீததை யிணர, வேங்கையம் படுசினை" நற். 379 : 3 - 4; (ஆ) "எரிமருள் வேங்கை" ஐங். 294; (இ) "எரியிணர்வேங்கை" பரி. 19 : 77; (ஈ) "எரிவேங்கை" கலி. 45 : 17; (உ) "எரிமருடோன்றல வொண்பூ வேங்கை" (பி-ம்) அகம். 218 : 20 - 21.

4. "நான்மருப்பின் மதயானை நறியபைந் தாமரை மடந்தையைத், தேன் மதர்ப்பத் திளைத்தாங்கு" என்புழி 'நான் மருப்பென்பது யானை யிரண்டினை யுணர்த்திற்று' என்று விடயமும் 'இரண்டானை பக்கத்தே நின்று நீரைச்சொரிய நடுவே தாமரைப்பூவிலே யிருந்த திருமகளைத் திளைத்தாற்போலே' என்று பொருளும் கூறி "வரிநுத லெழில்வேழம்............திருநயந் திருந்தன்ன" என்பதை மேற்கோள் காட்டினர், நச். சீவக. 2595. (ஆ) "நிரைத்த யானை முகத்துவரி கடுப்ப" நற். 176 : 5; (இ) "களிறு தன், வரிநுதல் வைத்த வலிதேம்பு தடக்கை" அகம். 349: 11 - 2.(ஈ) "களிற்று முகவரியின்" புறம். 119 : 2.

5. "பெருமலர்ப் பிரிந்த திருமக ளம்மல, ரருங்கவினெய்தச் சென்று சேர்ந்தாங், கருங்கலத் தொண்மனை பொலியப், பெருந்தகைத் தோளி பெயர்ந்தனை சென்மே" தமிழ்நெறி. மேற்.

6. "விறல்வெற்பு" இந்நூற்பக்கம் 51 - 5-ஆங் குறிப்பும் கலி. 53 : 2. 'விறன்மலை' என்பதன் குறிப்பும் ஈண்டு ஒப்புநோக்கற்பாலன.

7. (அ) "வீறு பஞ்சின்றி யமுதநெய் மாட்டிய விளக்கே, சீறுவெங்கதிர் செறிந்தன பேர்கல திரியா, மாறின் மண்டில நிரப்பிய மாணிக்க மணிக்கற், பாறை மற்றொரு பரிதியிற் பொலிவன பாராய்" என்பது