மறித்தரும் பயமிழி என்றும் பாடம். தும்பி வினைவர்போல முற்றியுங் குறுகியும் 1மறிதருமென்க. பூப்புலம்ப வேட்டட் போகியதும்பி தலைவி தனித்திருக்க முன்வரைந்துகொண்ட மனைவியிடத்தே வேட்கைசென்று போன தலைவனாகவும், அத்தும்பி வருத்தத்தை நிகழ்த்துவனவாய்த் தம்மிற் பகைத்த புலியையும் யானையையுந் தனக்குத் தேனைத் தரும் வேங்கைப்பூவாகக் கருதிச் சுழல்கின்றதன்மை 2நம்மேல் அன்பின்றி இருக்கவும் தனக்கு இன்பமுளதாகக் கருதிப் பகற்குறியும் 3இரவுக்குறியும் பெறுதற்கு 4மறுகுகின்ற தன்மையாகவும் உள்ளுறையுவமங்கொள்க. இது வினையுவமப்போலி. “பின்முறை 5யாக்கிய” என்ற (1) சூத்திரத்து, ‘தொன்முறை மனைவி’ என்றதனால், தொன்முறை மனைவி யுண்மையும் உணர்க. ‘நயனாடி நட்பாக்கும் வினைவர்போல்’ என்ற ஏனையுவமம் உள்ளுறையுவமத்தைத்தருகின்ற கருப்பொருட்குச் சிறப்புக்கொடுத்துத் தானும் உள்ளுறையுவமம்போற் றிணையுணர்தலைத் தள்ளாது நின்றது. 10 (2) (3்) | ஏறிரங் கிருளிடை யிரவினிற் பதம்பெறாஅன் மாறினெ னெனக்கூறி மனங்கொள்ளுந் தானென்ப கூடுதல் வேட்கையாற் 6குறிபார்த்துக் (4) குரனொச்சிப் பா (5) டோர்க்குஞ் செவியோடு பைதலேன் யானாக |
எ - து: யான் தன்னைக் கூடுதற்கணுளதாகிய வேட்கையினாலே யான் பகற்குறியைத் தள்ளின நிலைமையை என்பிழைப்பாக மனத்தான் நோக்கி
1. தொல். கற். சூ. 31. 2. (அ) “ஏறிரங்...........யானாக” என்னும் பகுதி, வந்தவழி யெள்ளுத லென்பதற்கும், (தொல். கள. சூ. 20. இள:) (ஆ) இருவகைக்குறிபிழைப் பாகிய விடத்துத் தலைவிக்குரிய கிளவி நிகழ்ந்ததற்கும் (தொல். கள: சூ. 16. நச்.). (இ) “எறிரங்கிருளிடை” என்னும் பகுதி, இரங்குதலென்பது இசைப்பொருளில் வருதற்கும் (தொல், உரிச். சே. 62: நச். சூ. 60: தெய். சூ. 47: இ - வி. சூ. 286,) மேற்கோள். 3. தலைவி, தன் நாணும் மடனும் நீங்கிய திறத்தைக் குறிப்பா னன்றிக் கூற்றாலும் அறிவித்தற்கு, “கூடுதல் வேட்கையாற் குறிபார்த்து..............................யானாக” என்பது மேற்கோள்: தொல். கள. சூ. 19. நச். 4. குரல் - பூங்கொத்து: பெரும்பாண். 192. குறுந் 138. கார். 39. சிலப். 14: 87. 5. ஓர்த்தல் - கருதுதல்: முருகு. 96; முல்லை. 88, கேட்டலுமாம்; மலை. 23; புறம். 68 : 17, 157 : 12, 280 : 6; பு - வெ. வெட்சி. கொளு. 4. (பிரதிபேதம்) 1மறுத்தருமென்க, 2தம்மேல், 3இரவிற்குறியும், 4மறுகின்ற, 5ஆகிய, 6குறிப்பார்த்து.
|