இரவிற்குறி யேற்றுக்கோடற்கு யான் கொத்தினையுடைய (1) நொச்சிப்பூ விழுகின்ற ஓசையை அவன் குறியோவென்று கருதுஞ்செவியோடே வருத்தத்தையுடையே னாகாநிற்க, தான் உருமேறு இடிக்கின்ற இருளையுடைய நடுவாகிய இராப்பொழுதினது செவ்வியைப் பெறானாய்ப் பகற்குறியையும் யான் மாறினேனென்று கூறி இனி மனத்தே கொள்ளாநிற்கும்: எ - று. மனத்தின்வினையைச் செவிமேல் ஏற்றினார்: அதுகருவியாக உணர்தல் 1நோக்கி.
14 | அருஞ்செல வாரிடை யருளிவந் தளிபெறாஅன் வருந்தினெ னெனப்பல வாய்விடூஉந் தானென்ப நிலையுயர் (2) கடவுட்குக் கடம்பூண்டு தன்மாட்டுப் பலசூழு மனத்தோடு பைதலேன் யானாக |
எ - து : யான் நிற்கின்ற நிலைமை உயர்தற்குக் காரணமான கடவுளுக்கு வரைவு முடிந்தாற்செய்யுங் கடன்களை மேற்கொண்டு தான் குறிபெறாமையிற்றன் மாட்டு நிகழும்வருத்தம் பலவற்றையுஞ் சூழும்மனத்தோடே வருத்தத்தை யுடையேனாகாநிற்க, தான் அரிய செலவினையுடைய வழியிடத்தே நம்மை அருள் செய்து வந்து நம்முடைய அளியைப் பெறானாய்ப் பகற்குறியும் பெறாமல் வருந்தினனென இனிப் பலவார்த்தையுங் கூறாநிற்கும்: எ - று. நிலையுயர்தல், வரைந்துகொண்டாலுயர்தல்.
1. (அ) “கொன்னுார் துஞ்சினும் யாந்துஞ் சலமே,.............மயிலடியிலைய மாக்குர னொச்சி, யணிமிகு மென்கொம் பூழ்த்த, மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே” குறுந். 138.(ஆ) “வியலுா ரெயிற்புற நொச்சியினுாழ்மலர் வீழ்தொ றெண்ணி, மயலுார் மனத்தொடு வைகினன் யான்றஞ்சை வாணன் வெற்பர், புயலுாரிருட்கங்குல் வந்தவ மேநின்று போயினரென், றயலுார் நகைக்குமென் னேயென்ன பாவங்கொ லாக்கினவே” தஞ்சை. 201. (இ) “நொச்சிப் புதுமலர் வீங்கிருள் வீழ்வன நோக்குதுமே” தணிகை, களவு. 575. (ஈ) “நொச்சிப் பூவுதிர் நள்ளிரு ணடுநாள்” கல். 2. (உ) “நொச்சிமென் போது வீழு மிருளின்” கூர்ம. இராமன்வனம். 62. 2. “குன்றக் குறவன் காதன் மடமகண், மன்ற வேங்கை மலர்சில கொண்டு, மலையுறை கடவுள் குலமுதல் வழுத்தித், தேம்பலிச் செய்த வீர்நறுங் கையள்” (ஐங். 259) என்பதும் இந்நுாற்பக்கம் 222. 3 - ஆங் குறிப்பில் இதற்குப் பொருந்துவனவும் நோக்குக, (பிரதிபேதம்) 1. நோக்கி என்பவென மூன்றுதாழிசையிலும் வந்தன இசைநிறையாய் நின்றன, அருஞ்செலலாரிடை.
|