18 | (1)கனைபெய னடுநாள்யான் (2) கண்மாறக் குறிபெறாஅன் புனையிழா யென்பழி நினக்குரைக்குந் தானென்ப (3) 1துளி (4) நசை வேட்கையான் மிசைபாடும் புள்ளிற்றன் னளி 2நசைஇ யார்வுற்ற வன்பினேன் யானாக |
எ - து: மழை தன்னைப் புரக்க நச்சுதன்மேலுள்ள வேட்கையினாலே வானத்தைப்பாடும்வானம்பாடிபோல இருவகைக்குறியிலும் தான் அளிக்கின்ற அளியை நச்சுதலாலே தன்மேல் நிறைவுற்ற அன்பினையுடையேனாகாநிற்க, தான் நெருங்கின மழையையுடைத்தாகிய பாதிநாளிலே யான் இடமாறப் பகற்குறியையும் பெறானாய்ப் பூணப்பட்ட இழையினையுடையாய்! என்னிடத்துண்டாகிய பழியை நினக்குச் சொல்லாநிற்கும்: எ - று. 3தான் யான் ஆக அருளாக்குமென்பன (?) எதிர்காலத்து நிகழ்கின்ற நிகழ்வு. என்பவென மூன்றுதாழிசையிலும் வந்தன இசைநிறையாய் நின்றன.
1. “கணைபெயல் ........... அன்பினேன் யானாக" என்பது (அ) குறியினொப்புமை மருடற்கும், (தொல். கள. சூ. 20. இள,) (ஆ) தலைவன், தலைவிசெய்குறியைப் பிழைத்தலாற் புலந்தவழித் தோழிசொல்லெடுப்புதற்குத் தலைவி சிறுபான்மை கூறுதலு முண்டென்பதற்கும் (தொல். கற். சூ. 16. நச்.) மேற்கோள.் (இ) “கனைபெயல்” இந்நுாற்பக்கம் 273. 3-ஆம் குறிப்புப் பார்க்க. 2. கண்மாறல் - இடமாறுதல். குறுந். 125. புறம். 143 : 4. 3. (அ) “துளிநசைப் புள்ளினின் னளிநசைக் கிரங்கி” புறம், 198 : 25, (ஆ) ”மேகப் புள்வயிற் பிறந்த புட்போ லொன்றலா துரைத்த றேற்றார்” - (இ) ‘வானம்பாடி மேகத்துப் பிறந்த துளியையே நச்சிப் பாடு மாறுபோல அரசனுள்வயிற்பிறந்த அளியொன்றுமல்லாதனவற்றை உரைத்தலறியாத தேவியர்’ சீவக, 2897. (ஈ) “பாகையுந் தேனையும் போன்மொழியார்.............. எழிலியை நோக்கி யிரங்குபுள்..........போனின்ற வாதனியேயிந்தச்சோலையிலே” தஞ்சை, 58. என்பவைகளும் (உ) “தற்பாடிய தளியுணவிற், புட்டேம்பப் புயன்மாறி, வான்பொய்ப்பினும்” பட், 3 - 5, என்பதும் (ஊ) ”மலையுறை பகைத்து வானுறைக்கணக்கும், புட்குலஞ் சூழ்ந்த பொருப்பு” (எ) “அளிகார்ப் பாடுங் குரனீர் வறந்த, மலைப் புட்போல நிலைக்குர லணந்தாங், குணவுளங் கருதி யொளியிசைபாட” கல். 53 : 10 - 11, 95 : 11 - 13. என்பவைகளும் கலி, 146 : 52 - 3, ஆம் அடியின் குறிப்புக்களுட் பொருந்துவனவும் இங்கே அறிதற்பாலன, 4. நசைவேட்கை, முதுமொழிக், 69. (பிரதிபேதம்) 1 துளிநசைஇ, 2 நசையார் வுற்ற, 3 தான் யானருளர்க்கு மென்பன நிகழ்வு, என வாங்கு எ - து. ஆங்கசை கலந்தநோய்.
|