பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி285

எனவாங்கு.
எ - து; என்று 1இவள் கூறும்படியாக : எ - று.

23 கலந்தநோய் கைம்மிகக் (1)கண்படா வென்வயிற்
(2)புலந்தாயு நீயாயிற் பொய்யானே வெல்குவை
யிலங்குதா ழருவியோ டணிகொண்ட நின்(3)மலைச்
சிலம்புபோற் கூறுவ கூறு
மிலங்கே ரெல்வளை யிவளுடை நோயே

எ - து: 2இவளைக் கலந்த நோய் 3இவள் ஒழுக்கத்தை மிகுக்கையினாலே அது கண்டு கண்துயிலாத என்னிடத்தே நீவெறுத்தாயுமாய்க் கூறுவகூறும் எல்வளையையுடைய இவளுடைய நோயை இவள் ஆற்றும்படியாக ஒரு பொய் மொழி கூறியாயினும் வெல்வாய் நீ உரைத்ததே இவட்கு உரையாமென ஆற்றாமைகூறி வரைவுகடாயினாள்.

(4) அருவியாலே அழகுகொண்ட நின்மலையின் பக்கமலை கூறுவனவே கூறுமாறுபோல நீகூறுவனவற்றையே கூறும் இலங்குகின்ற அழகினையுடைய எல்வளையென்க. எல்,ஒளி.


1. “காதலிமாட், டுள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை” நான்மணி. 9.

2. “புலந்தாயும்..............வெல்குவை” என்பது களவில் தலைவிகுறிப்பினால் தோழி கூறியதற்கு மேற்கோள். தொல். கற். சூ. 16. நச்.

3. (அ) ”குரல்கேட்ட கோழி குன்றதிரக் கூவ, மதநனி வாரண மாறுமா றதிர்ப்ப, வெதிர்குதி ராகின் றதிர்ப்பு” (ஆ) ”மணிமரு ணன்னீர்ச்சினை மடமயி லகவக், குருகிலை யுதிரக் குயிலினங் கூவப், பகர்குழல் பாண்டி லியம்ப வகவுநர், நாநவில் பாடன் முழவெதிர்ந் தன்ன, சிலம்பிற் சிலம்பிசை யோவா தொன்னார்க், கடந்தட்டான் கேழிருங் குன்று” பரி. 8 : 19 - 21; 15 : 40 - 45. (இ) “அரையிலங்கு மேகலை யார்ப்பி னயல, வரையிலங்கு மேகலை மாறே நின்றார்க்கும், புரையிலங்கு பொற்சிலம்பு தான்சிலம்பும் போழ்தி, னிரையிலங்கு பொற்சிலம்பு நேரே சிலம்பும்” (ஈ) “கொங்குண் குழலார் குழலேர் மணிமழலை, தங்கி னவைகொண்டு தானு மெதிர்மிழற்று.
மங்க ணவர்செய்வ செய்தசதி யாடின்றே. செங்க ணெடியான் கடிகாவிற் செய்குன்றே” சூளா. சுயம். 96, 97.

4. “மலையை அருவி அழகுறுத்துமென்பதை, “மணிவரை மருங்கி னருவி போல, வணிவரம் பறுத்த”
(கலி. 103: 10 - 11.) என்னும் பகுதியாலும் அதன் குறிப்பாலுமுணர்க.

(பிரதிபேதம்) 1அவள், 2என்று இவள்கூறும்படியாக இவளை, 3அவளொழுக்கத்தை மிகுகையினாலே.