அல்லகுறிப்பட்டு மீண்டதனை என்பிழைப்பாகக் கருதும் அவனெனக் கவன்று ஆற்றாளா மென்றதனாலும் “தன்குறி தள்ளிய..........................................தழீஇத் 1தேறினும்” என்னும் (1) சூத்திரத்திற்குப் பகற்குறியென்றே பொருளாதலானும் இவ்வாறே பொருள்கூறவேண்டு மென்றுணர்க. தாழிசைகளில் தோழி சொல்லெடுப்புதற்குத் தலைவி சிறுபான்மை கூறுதலை, “புலத்தலு மூடலுமாகிய விடத்துஞ், சொலத்தகு கிளவி தோழிக் குரிய” (2) என்பதனாற் கொண்டவாறுணர்க. இதனால், தலைவற்கு அசைவுபிறந்தது. இஃது ஒன்பதடித் தரவும் நான்கடித் தாழிசையும் தனிச்சொல்லும் 2ஐயடிச் சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலி. (10) (47) | ஒன்று, இரப்பான்போ லெளிவந்துஞ் சொல்லு முலகம் புரப்பான் போல்வதோர் மதுகையுமுடையன் வல்லாரை வழிபட் டொன்றறிந் தான்போ னல்லார்கட்டோன்று மடக்கமு முடைய | 5 | னில்லோர் புன்கணீகையிற் றணிக்க வல்லான் போல்வதோர்வன்மையு முடைய னன்னா னொருவன்றன் னாண்டகைவிட்டென்னைச் சொல்லுஞ்சொற் கேட்டீ சுடரிழாய்பன்மாணும், | 9 | நின்னின்றியமையலேன் யானென்னு மவனாயி னன்னான்சொ னம்புண்டல் யார்க்குமிங்கரிதாயி னென்னுற்ற பிறர்க்குமாங் குளகொல்லோநறுநுதால் ; | 12 | அறியாய்நீவருந்துவல் யானென்னு மவனாயிற் றமியரே துணிகிற்றல்பெண்டிர்க்கு மரிதாயி னளியரோ வெம்போலவீங்கிவன் வலைப்பட்டார் ; | 15 | வாழலேன்யானென்னு நீநீப்பி னவனாயி னேழைய ரெனப்பலர்கூறுஞ்சொற் பழியாயிற் |
1. தொல். கள. சூ. 20. 2. தொல். க.ற். சூ. 16. இச்சூத்திரவுரையில் (அ) “கலந்தநோய்..................... நோயே” என்பதனை மேற்கோள் காட்டி ‘இது களவு’ என்பர் இளம் பூரணர் ; (ஆ) “கலந்தநோய்.......................வெல்குவை” என்பதனைக் குறிபிழைத்துழிப் புலந்ததற்கு மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர். (பிரதிபேதம்) 1 தேறியவென்னும், தேறலுமென்னும், 2 ஐந்தடிச்
|