பக்கம் எண் :

316கலித்தொகை

(7). (1)தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை
1நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின்
மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉ
(2) மணங்கென வஞ்சுவர் 2சிறுகுடி யோரே

1. (அ) பிற்சென்று தலைமகனைப் பரங்கிவரவு விலக்கற்கு, “தாமரைக் கண்ணியை.......................காவலரே” என்பது மேற்கோள் ; நாற், சூ. 158. (ஆ) பார்ப்பான் உரியப்பொருட்டலைவனாக வருதற்கு “தாமரைக்கண்ணியை................... மாலையை” என்பது மேற்கோள். தொல். அகத். சூ. 24. நச். (இ) “மாயோன்மேய மன்பெருஞ் சிறப்பிற், றாவாவிழுப்புகழ்ப் பூவை நிலையும் என்றது; மாயோன் விழுப்புகழ் - மாயனுடைய காத்தற்புகழையும், மேயபெருஞ்சிறப்பிற் றாவாவிழுப்புகழ் - ஏனோர்க்கு உரியவாய் மேவிய பெரிய தலைமையிற் கெடாத படைத்தல், அழித்தல் என்னும் புகழ்களையும், மன் பூவைநிலையும் - மன்னர் தொழிலுக்கு உவமையாகக்கூறும் பூவைநிலையும்; என்றது ஒன்றனை, ஒன்றுபோற் கூறுந்துறை. மன்எனப் பொதுப்படக் கூறியவதனான் நெடுநில மன்னர்க்கும் குறுநிலமன்னர் முதலியோர்க்கும் கொள்க. பெருஞ்சிறப்பு என்றதனாற் படைத்தலுங் காத்தலும் அழித்தலுமன்றி அவரவர் தாமாகக் கூறலும் முருகன் இந்திரன் முதலியோராகக் கூறலுங்கொள்க” என்றுகூறி உரிப்பொருட்டலைவனை முருகனாகக் கூறியதற்கும் (தொல். புறத். சூ. 5.நச்) (ஈ) தோழி தலைவனை உயர்த்துக் கூறியதற்கும் (தொல். பொருளி. சூ. 46. இளம்; நச்.) (உ) “நாடு மூரும்...................தோன்றிய கிளவியொடு” என்னும் பகுதியின் உரையில் ‘நாடுமுதலாயின சுட்டித் தலைவன் மாட்டுத்தோன்றுங் கிளவி......................அவற்றின் மிகுதிபடக் கூறுதல்’ என்று கூறி, பிறப்புப்பற்றி வந்ததற்கும் (தொல். கள. சூ. 23. இளம்) (ஊ) தலைமகன்குலங் கூறியதற்கும் (நாற்கவி. சூ. 166.) (எ) மருதத்திணைக்குரிய தாமரைப்பூக் குறிஞ்சித் திணைக் கண்வந்து மயங்கியதற்கும் (இ - வி. சூ. 394) “தாமரைக்கண்ணியை..................... சிறுகுடியோரே” என்பது மேற்கோள்.

2. இதன் முன்குறிப்பில் (இ) என்பதன் இறுதியிலுள்ள வாக்கியத்தால் இங்கு அணங்கென்றது முருகனை யென்று அறியப்படும், இப்பகுதி யோடு (அ) “குறியிறைக் குரம்பைநம் மனைவயிற் புகுதரு, மெய்ம்மலி யுவகைய னந்நிலைகண்டு, முருகென வுணர்ந்து முகமன்கூறி, யுருவச் செந்தினைநீரொடுதூஉய், நெடுவேட்பரவு மன்னை” (அகம். 272 : 11 - 5) (ஆ) “கடம்புசூடி யுடம்பிடி யேந்தி, மடந்தை பொருட்டால்வருவதிவ்வூ, ரறுமுக மில்லை யணிமயி லில்லை, குறமக ளில்லை செறிதோ ளில்லை, கடம்பூண் டெய்வ மாக நேரார், மடவர் மன்றவிச் சிறுகுடியோரே” (சிலப். 24.) என்பவை ஒப்புநோக்கற்பாலன.

(பிரதிபேதம்)1 நேரிதட் கோதை, 2சிறுகுடி வாழ்நரே.