எ - து. தாமரைப்பூவாற் செய்த கண்ணியை 1யுடையையாய்த் தண்ணிய நறிய சந்தனத்தை 2யுடையையாய் ஒத்த இதழாற் கட்டின தோதையையுடையாள் செய்த குறியிடத்தே நீ வருவையாயின் மணம் நாறுகின்ற நாற்றத்தை 3யுடையவாய மலைக்கண்ணே நின்று பலியைக் கொள்ளும் அணங்குகளிலே ஓர் அணங்கென்று கருதிச் சிறுகுடியிலுள்ளோர் அஞ்சுவர்; எ - று (1) | தாமரைப்பூக் குறிஞ்சிக்கண் வந்தது. | 11 | ஈர்ந்தணாடையை யெல்லி மாலையை சோர்ந்துவீழ் கதுப்பினாள்செய்குறி நீவரி னொளிதிகழ் ஞெகிழியர்கவணையர் வில்லர் களிறென வார்ப்பவ ரேனல்கா வலரே |
எ - து: பகற்காலத்துத் தீர்த்தமாடுகின்ற நின் ஒழுக்கத்திற்கேற்ற ஈரத்தினாற்றண்ணிதாகிய ஆடையையுடையையாய் இராக்காலத்துப்புணர்ச்சிக் குரியனவற்றை அணிகின்ற இயல்பினை 4யுடையையாய் நீ வரைந்து கோடலைக்குலைந்து ஆயத்தார் விரும்புகின்ற மயிரினையுடையாள் செய்தகுறியிலே வருவையாயின் நீ கோடுமுதலியவற்றைக் குறித்துச் செய்யுங் குறிகளாலே ஒளிவிளங்குகின்ற குறைக்கொள்ளியையுடையராய்க் கல்லெறியுங் கவணை யுடையராய் வில்லினையுடையராய்க் களிறு வந்ததென்று கருதித் தினைப் புனத்தைக் காக்கின்றவர்கள் ஆரவாரிப்பார்கள்; எ - று. மாலைமுதலியன பாரத்தாற் குலைந்து வீழ்கின்ற கதுப்புமாம். 15 | ஆர மார்பினை யண்ணலை யளியை யைதக லல்குலாள் செய்குறி நீவரிற் (2)கறிவளர் சிலம்பில் 5வழங்க லானாப் புலியென் றோர்க்குமிக் கலிகே ழூரே |
எ - து: ஆரமணிந்த மார்பினையுடையையாய்த் தலைமையையுடையையாய் அருளுடையையாய் மெல்லிதாயகன் றவல்குலையுடையாள் செய்தகுறியிலே
1. (அ) தாமரை மருதத்துக்குரியபூவாகலின் இவ்வாறு கூறினார். இதனைத் “தாமரைக் கண்ணியை......................நீவரின்” என்றபகுதியை (தொல். அகத் சூ. 19. உரையில்) மேற்கோள்காட்டி இவரேவிளக்கியிருத்தலானறிக. (ஆ) “செந்தாமரை மலருஞ் செய்வயனல்லூர” (இ) “தாமரை தன்னையர்பூ” திணைமொழி. 36 : 40. (ஈ) “போதவிழ் தாமரைப் பூந்துறையூரனை” கைந்நிலை. 16. என்பவற்றாலும் தாமரை மருதத்துக்கு உரிய பூவென்பது விளங்கும். 2. (அ) “கறிவளரடுக்கத்து” குறுந். 288. புறம் 168 : 2. (ஆ) “கறிவளர் சிலம்பில்” ஐங். 243. சிலப். 28 : 114. (இ) “கறியிவர் சிலம்பின்” அகம். 112 : 14. (ஈ) “கறிவளர் பூஞ்சாரல்” திணைமாலை. 7. (பிரதிபேதம்)1உடையாய், 2உடையமலை, 4உடையாய், 5செறிதலானா.
|