பக்கம் எண் :

மூன்றாவது மருதம்429

தீயாற் சுவறி அறுதலையுடைத்தாய் ஒழுக அவ்வருத்தத்தைக் கண்டு இனிதாக அமர்ந்த கணவன் தன் அடியைச் சேர்ந்து இறைஞ்சி மிகவிரைந்து அளித்த லாலே சிறிது மகிழ்பவள் முகம்போலப் பசிய இலைக்குள்ளே நின்ற தாமரை யினது தனித்த மலர் தனக்கு வருத்தத்தைச்செய்யும் பனி ஒருகூற்றிலே வடியாநிற்கத் தான் மிகச் செவ்வியின்றி அலருங் குளிர்ந்ததுறையினையுடைய நல்ல ஊரனே! எ - று.

இதனால் வைகறைக்காலத்து மனைவயிற் செல்லாது இளைய செவ்வியை யுடைய பரத்தையரைப் புணர்ந்து விளையாடி அதனினும் அமையாது பின்னும் அவரைப் புணர்தற்குச் சூழ்ந்துதிரிகின்ற இவ்வூரிடத்தே நின்னைப் பெறாது சுற்றத்திடத்தேயிருந்து 1கண்ணீர் வாராநிற்க, நீ ஒருகாலத்து அளித்தலிற் சிறிது செவ்வி பெற்றாளாயிருக்கும்படி தலைவியை வைத்தாய்; என்னை வருத்துதல் கூறவேண்டுமோவெனக் காமக்கிழத்தி உள்ளுறையுவமங் 2கூறினாள்.

முகம்போலவென்ற ஏனையுவமம் தாமரைமலர் பனிவாரத் தளைவிடு மென்ற உள்ளுறையுவமத்தைத் தருகின்ற கருப்பொருட்குச் சிறப்புக் கொடுத்து நின்றது. இஃது உவமப்போலி "இனிதுறு கிளவியுந் துனியுறு கிளவியு, முவம மருங்கிற் றோன்று மென்ப" (1) என்பதனான் இரண்டுந் தோன்ற 3நின்றது,

9 ஓருநீ பிறரில்லை யவன்பெண்டி ரெனவுரைத்துத்
4தேரொடுந் தேற்றிய பாகன்வந் தீயான்கொ
லோரிற்றான் கொணர்ந்துய்த்தார் புலவியுட் பொறித்தபுண்
பாரித்துப் புணர்ந்தநின் 5பரத்தைமை காணிய

எ - து: அவன்பெண்டிர் நின்னையொழியப் பிறர் இல்லை; அதனை ஓர்ந்து பாரெனக் கூறித் தனக்குத் தெய்வமாகிய தேரைத் தொட்டுச் சூளுற்ற பாகன் ஈண்டு வாரானோ? தான் கொண்டுவந்த பரத்தையரெல்லாரும் வருதற்குச் 6சமைத்ததோர் இல்லிலேவிட்ட பரத்தையர்புலவியாலே அழுந்தின வடுக்கன் நாணமின்மையின் இவைகிடக்க 7வேண்டுமென்றுபரப்பி இட்டுவைக்கையினால் அவை மறையாமற் கூடிக்கிடந்த நின் 8பரத்தைமையைக் காண்டற்கு. எ - று.

உம்மை, சிறப்பு, வந்தீயான், 9 வினைத்திரிசொல். ஓர் என்னுஞ்சொல், உகரம் பெற்று வந்தது.


1.தொல். உவம. சூ. 28.

(பிரதிபேதம்) 1கண்ணீரால் வாராநிற்க, 2கூறினாள் துனிமிகுதலாலே ................. சிறிது மகிழ்பவன், முகம்போலவென்ற வேனையுவமம், 3நின்றது ஓரென்னுஞ் சொல்லுகரம் பெற்றமரூஉ ஒருநீ, 4தேரொடு தேற்றிய, 5பரத்தமை, 6சமைத்தவோரில்லிலே, 7வேணுமென்றதுபரப்பி, 8பரத்தமையை, 9விணைத்திரிசொல் ஒரென்னுஞ் சொல்லுகரம்பெற்று வந்தது மடுத்தலன்.