பக்கம் எண் :

686கலித்தொகை

எ - து: ஏற்றையும் நங்காதலரையும் பாதுகாத்துச் சுரும்பினம் ஒலிக்கின்ற கானத்தை நாம் பாடினமாய்த் திருமாலைப் பரவுவேம்; அப்பயனாலே எம்முடைய மறம்பொருந்திய பாண்டியன் பகைவர்நிலமென்னும் பெயர் கெட்டுத் தன்னிலமென்னும் பெயர்பெறும்படி அவர்நாட்டைத் திறைகொண்டு பகைவரை வெல்வானாக என்றார். எ - று.

இந்நிலப்பண்பிருந் தவா 1றென்னென்று கண்டோர் கூறிற்றாகக்கொள்க.

இது, கண்டார்க்குப் புதுமையாகிய மருட்கை பிறந்தது.

இது முன் ஒருகொச்சகமும் தனிச்சொல்லும் முட்டடியின்றிக் குறைவு சீர்த்தாகிய சொற்சீரடிபெற்ற கொச்சகவெண்பாவும் நெடுவெண்பாட்டும் தனிச்சொல்லும் சொற்சீரடிவந்த கொச்சகமும் ஐஞ்சீரடுக்கிய குறுவெண் பாட்டிரண்டும் ஐஞ்சீரடுக்கிய நெடுவெண்பாட்டும் தனிச்சொல்லும் குறுவெண் பாட்டும் நான்கு தாழிசையும் தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்ற கொச்சகம்.

(107). எல்லா விஃதொன்று கூறு குறும்பிவர்
புல்லினத் தார்க்குங் குடஞ்சுட் டவர்க்குமெங்
கொல்லேறு கோடல் குறையெனக் கோவினத்தார்
பல்லேறு பெய்தார் தொழூஉ;
5தொழுவத்து;
சில்லைச், செவிமறைக் கொண்டவன் சென்னிக் குவிமுல்லைக்
கோட்டங்காழ் கோட்டி னெடுத்துக்கொண் டாட்டிய
வேழை யிரும்புகர் பொங்கவப் பூவந்தென்
கூழையுள் வீழ்ந்தன்று மன்;
10அதனைக், கெடுத்தது பெற்றார்போற் கொண்டியான் முடித்தது
கேட்டன ளென்பவோ யாய்;
12கேட்டா லெவன்செய்ய வேண்டுமோ மற்றிகா
வவன்கண்ணி யன்றோ வது;
14பெய்போ தறியாத்தன் கூழையு ளேதிலான்
கைபுனை கண்ணி முடித்தாளென் றியாய்கேட்பிற்
செய்வதி லாகுமோ மற்று;
எல்லாத் தவறு மறும்;
ஒஒ அஃதறு மாறு;

(பிரதிபேதம்)1என்றுகண்டோர்கூற்றாகக்கொள்க.