பக்கம் எண் :

நான்காவது முல்லை687

19ஆயர் மகனாயி னாயமக ணீயாயி
னின்வெய்ய னாயி னவன்வெய்யை நீயாயி
னின்னைநோ தக்கதோ வில்லைம னின்னெஞ்ச
மன்னைநெஞ் சாகப் பெறின்;
அன்னையோ;
24ஆயர் மகனையுங் காதலை கைம்மிக
ஞாயையு மஞ்சுதி யாயி னரிதரோ
நீயுற்ற நோய்க்கு மருந்து;
27மருந்தின்றியா னுற்ற துயராயி னெல்லா
வருந்துவே னல்லனோ யான்;
29வருந்தாதி;
மண்ணிமா சற்றநின் கூழையு ளேறவன்
கண்ணிதந் திட்ட தெனக்கேட்டுத் திண்ணிதாத்
தெய்வமால் காட்டிற் றிவட்கென நின்னையப்
பொய்யில் பொதுவற் கடைசூழ்ந்தார் தந்தையோ
டையன்மா ரெல்லா மொருங்கு.

இது தலைவி தோழிக்குஅறத்தொடுநிற்பத் தமர் 1வரைவுடன்பட்டமை அவட்கு அவள் சொல்லியது.

இதன் பொருள்.


(1)
(3)
எல்லா விஃதொன்று 2கூறு குறும்பிவர்
புல்லினத் தார்க்குங் (2) குடஞ்சுட் டவர்க்குமெங்
கொல்லேறு கோடல் (4) குறையெனக் கோவினத்தார்
பல்லேறு பெய்தார் தொழூஉ.


1. (அ) "புல்லினத்தாயனைநீ யாயிற் குடஞ் சுட்டு, நல்லினத் தாயரெமர்" கலி. 113 : 8 - 9. (ஆ) "புல்லினத்தாய மகன்" கலி. 115 : 4.

2. (அ) "நீரார் நிழல குடஞ்சுட் டினத்துள்ளும்" கலி. 109 : 3. (ஆ) "கடுஞ் சுரையா னான்கு, குடஞ்சுட் டினத்தாற் கொடு" பு - வெ. வெட்சிப். 18.

3. "கொல்லேறு கொண்டான்" கலி. 106 : 43.

4. குறை யென்பதற்கு இன்றியமையாததென்று சேனாவரையரும் பரிமேலழகரும் முடிக்கப்படும் பொருளென்று புறநானூற்றுரையாசிரியரும் பொருள் கூறுவர்.

(பிரதிபேதம்)1வரைவுடம்பட்டமை, 2கூறுங்குறும்பு.