எ - து: ஏடீ! குறும்பிடத்தே பரந்திருக்கின்ற ஆட்டிடையர்க்கும் இப்பசு இன்னதனைக் குடம்பால் போதுமென்று சுட்டுதலையுடைய பசு விடையர்க்கு மாகக் கோவினத்தையுடைய நஞ்சுற்றத்தார் எம்முடைய கொல்லுகின்ற ஏற்றைத் தழுவுதலே காரியமென்று தொழுவிலே ஏறுகளைப்புகுதவிட்டார். எ - று. 5 | தொழுவத்துச் சில்லைச், (1) செவிமறைக் கொண்டவன் சென்னிக் குவிமுல்லைக் (2) கோட்டங்காழ் கோட்டி னெடுத்துக்கொண் டாட்டிய வேழை யிரும்புகர் பொங்கவப் பூவந்தென் கூழையுள் வீழ்ந்தன்று மன் |
எ - று: அத்தொழுவிடத்துச் சிலுவைக்குணத்தையுடைய செவிமறை யாயிருக்கின்ற ஏற்றைத் தழுவினவனுடைய சென்னியிற் கிடந்த குவிந்த (3) முல்லைப் பூவாற் கட்டின வளைவினை யுடைய கண்ணியைக் கொம்பிலே எடுத்துக்கொண்டு அலைத்த எழையாகிய பெரிய புகரேறு துள்ளுகையினாலே அப்பூ வந்து என்மயிருக்குள்ளே மிகவும் வீழ்ந்தது. எ - று. ஏழையென்றாள் களவொழுக்கம் 1வெளிப்படுதல் இறவாமற் கோட்டால் அலைத்தமைபற்றி. 10 | அதனைக், (4) கெடுத்ததுபெற்றோர்போற் கொண்டியான்முடித்தது கேட்டன ளென்பவோ யாய் |
எ - து: அக்கண்ணியை, கெடுத்ததொன்று மீண்டு பெற்றாரைப்போல எடுத்துக்கொண்டு யான்முடித்ததன்மையை யாய் கோட்டாளென்று சொல்லு வர்களோ? ஈதொரு வார்த்தையை எனக்கு விளங்கக் கூறுவாயென்றாள். எ - று. 2இஃதொன்று கூறு என்னுஞ்சொல்லைஎன்பவோ என்பதன் பின்னே கூட்டிப் பொருள்கூறுக.
1. "செவிமறை நேர்மின்னு நுண்பொறி வெள்ளை" கலி. 101 : 27. 2. (அ) "கோட்டங் கண்ணியுங் கொடுந் திரையாடையும்" புறம். 275: (ஆ) "கோட்டுப்பூச் சூடினும்" குறள். 1313. 3. "தேன்சொரி முல்லைக்கண்ணிச் செந்துவராடையாயர்" சீவக. 485. 4. (அ) "கெடுத்துப்படு நன்கல மெடுத்துக் கொண்டாங்கு" நற். 182 : 5. (ஆ) "பழந்தன மிழந்தன படைத்தவரை யொத்தாள்" கம்ப. உருக்காட்டு : 65. (இ) இழந்ததனம் பெற்றவர்போ லிராக்கதர்க ளிரைத் தீண்டி யிழந்ததங்கள், பழம்பதியிற் குடிபுகுந்து" இராமா. வரையெடுத்த. 55. (பிரதிபேதம்)1வெளிப்படுத்தல், 2இதுவொன்று.
|