பக்கம் எண் :

நான்காவது முல்லை689

12கேட்டா லெவன்செய்ய வேண்டுமோ மற் (1) றிகா
வவன்கண்ணி யன்றோ வது

எ - து: மேல் தோழி, அக்கண்ணி வரைந்துகோடல் தாழாத அவனுடைய கண்ணியன்றோ? அதனாற் பின்னை யாய் கேட்டால் என்ன பரிகாரம் 1யாஞ்செய்யவேண்டும்? அதற்கு ஒன்றும்வேண்டாவென்றாள். எ - று.

ஓ, அசை.

14(2)பெய்போ தறியாத்தன் கூழையு ளேதிலான்
கைபுனை கண்ணி முடித்தாளென் றியாய்கேட்பிற்
செய்வதி லாகுமோ மற்று

எ - று: அதுகேட்ட தலைவி, (3) முடிக்கும் பூ 2இதுவென்றறியாத தன்னுடைய மயிரில் ஏதிலான் கையாலே புனைந்தகண்ணியை முடித்தாளென்று தாய்கேட்கில் அதற்குப் பின்னை அவள் வெகுளாமற்செய்வதொரு பரிகாரம் இல்லையாயிருக்குமோ என்றாள். எ - று.

மயிருக்கு (4) மணந்தரும் பூ முடித்தல் வேண்டுமென்று அறியாதவள். 17 எல்லாத் தவறு மறும்

எ - து: அதுகேட்ட தோழி, இனி எல்லாத் தவறுகளும் நீங்குங்கா ணென்றாள். எ - று.

அவன் வரைவுணர்ந்தமையின்.

18 ஒஒ அஃதறு மாறு

எ - து: அதுகேட்ட தலைவி, ஒஒஎனவியந்து அத்தவறு அறுமாறென்னையென வினாயினாள். எ - று.


1. இகுத்தல் - தாழ்த்தல்.

2. "புல்லினத் தாய மகன் சூடி வந்ததோர், முல்லை யொருகாழுங் கண்ணியு மெல்லியால், கூந்தலுட் பெய்து முடித்தேன்" கலி. 115. 4 - 6.

3. முடிக்கும் பூ - சூடும்பூ; சூடாப்பூ, எருக்கு முருக்கு முதலியவை.

4. மணத்தின் பொருட்டே பூக்களை மக்கள் அணிவரென்பது, "ஆணிக் கனக மணந்தரிற் பூமண மார்கொள்ளுவர்" என்பதனாலும் எருக்கு முதலியன மணமில்லாதன வென்பது, "துன்னியவூ ரினும் விரை சார்ந், தறியாத புல்லெருக்கும்" (வாட்போக்கிக். 99.) என்பது முதலியவற்றாலும் அறியலாகும்.

(பிரதிபேதம்)1செய்யவேணுமதற்கொன்றுவேண்டா, 2ஈதென்றறியாத தன் மயிரில்