எ - து: 1கைம்மிக ஆயர்மகனையுங் காதலித்தலையுடையையாய்க் 1கைம்மிகயாயையும் அஞ்சியிரா 2நின்றாயாயின், இனி நீயுற்ற காமநோய்க்கு மருந்து அரிதென்றாள். எ - று. அரோ, அசை. 27 | மருந்தின்றியா னுற்ற துயராயி னெல்லா வருந்துவே னல்லனோ யான் |
எ - து: அதுகேட்ட தலைவி, ஏடீ! யானுற்ற வருத்தத்திற்கு மருந்தில்லை யாயின், இனி வருந்தியே விடுவேனல்லனோ என்றாள். எ - று. 29 (1) | வருந்தாதி மண்ணிமா சற்ற (2) நின் கூழையு ளேறவன் கண்ணிதந் திட்ட தெனக்கேட்டுத் திண்ணிதாத் தெய்வமால் காட்டிற் றிவட்கென நின்னையப் பொய்யில் 3பொதுவற் கடைசூழ்ந்தார் தந்தையோ டையன்மா ரெல்லா மொருங்கு |
எ - து: அதுகேட்ட தோழி, இனி வருந்தாதேகொள்; கழுவி அழுக்கற்ற நின்னுடைய மயிரிடத்தே ஏற அவன் கண்ணியைத் தந்ததென்று பிறர் சொல்லக் கேட்டு, தந்தையோடே தமையன்மாரெல்லாரும் சேரக் கூடியிருந்து, தெய்வமாகிய மால் இவளுக்கு இவனைத் 4திண்ணிதாகக்கொண்டு வந்து காட்டிற்றென மகிழ்ந்து, நின்னை அந்தக் களவொழுக்கத்தைப் பிறர் அறியாமல் ஒழுகவல்ல பொதுவனுக்கு அடுத்தலைச்சூழ்ந்தார் காணென்றாள். எ - று.
லாகும். பதிப்பில் ஞகரம் யகரமாக மாறியதனால் ஞயமாறிக்கிடந்த இப்பகுதியைத் திருத்தி யின்புறுத்தியது தமிழ்நெறி விளக்கமே. யாயென்பது தன்மையொடடுத்த முறைப்பெயரென்பதுமட்டும் தொல்காப்பிய உரைகளிற் குறிக்கப்பட்டுள்ளது; ஞா யென்பது முன்னிலையொடடுத்த முறைப்பெயராதலை (ஆ) "ஞாயர் பயிற்ற" (இ) "ஞாயர்பா லுண்டி" (ஈ) "ஞாயர்மாட்டைப்பால்" கலி. 81 : 12; 85 : 28, 36. என இந்நூலிற் பலவிடத்தும் வருதலும் வலியுறுத்தும். இவை இவ்வரம்புகடந்துதாயென்னும் பொருளிலும் வருதலுண்டு. 1. "மாசற மண்ணுற்ற மணியேசு மிருங் கூந்தல்" கலி. 77 : 16. என்பதும் அதன் குறிப்புக்களும் பார்க்க. 2. "அவன்கண்ணி நீபுனைந்தா யாயி னமரு, மவன்க ணடைசூழ்ந்தார் நின்னை" கலி. 115 : 17 - 18. (பிரதிபேதம்)1கைமிக, 2நின்றாய் இனிநீ, 3பொதுவர்க்குடை, 4திண்ணியதாக.
|