பக்கம் எண் :

692கலித்தொகை

இதனால், தலைவிக்குப் புணர்ச்சியுவகை பிறந்தது.

இது கொச்சகவெண்பாவும் தனிச்சொல்லும் ஐஞ்சீரடுக்கிய கொச்சக 1வெண்பாவும் ஐஞ்சீரடுக்கிய குறுவெண்பாட்டும் ஈரடியானொன்றும் கொச் சகவெண்பாவும் 2முச்சீரடியானொன்றும் இருசீரடியானொன்றும் நெடுவெண் பாட்டும் தனிச்சொல்லும் குறுவெண்பாட்டும் கொச்சகவெண்பாவும் தனிச் சொல்லும் சுரிதகமும்பெற்ற கொச்சகக்கலி. (7)

(108).(1)இகல்வேந்தன் சேனை யிறுத்தவாய் போல
வகலல்குறோள் கண்ணென மூவழிப் பெருகி
நுதலடி நுசுப்பென மூவழிச் சிறுகிக்
கவலையாற் காமனும் படைவிடு வனப்பினோ
டகலாங்க ணளைமாறி யலமந்து பெயருங்கா
னகைவல்லேன் யானென்றென் னுயிரோடு படைதொட்ட
விகலாட்டி நின்னை யெவன்பிழைத்தே னெல்லாயான்;
அஃதவல மன்று மன;
9ஆய ரெமரானா லாய்த்தியேம் யாமிகக்
காயம்பூங் கண்ணிக் கருந்துவ ராடையை
மேயு நிரைமுன்னர்க் கோலூன்றி நின்றாயோ
ராயனை யல்லை பிறவோ வமரருண்
ஞாயிற்றுப் புத்தேண் மகன்;
14அதனான் வாய்வாளேன்;
முல்லை முகையு முருந்து நிரைத்தன்ன
பல்லும் பணைத்தோளும் பேரம ருண்கண்ணு
நல்லேன்யா னென்று நலத்தகை நம்பிய
சொல்லாட்டி நின்னொடு சொல்லாற்று கீற்பார்யார்;
19சொல்லாதி;
நின்னைத் தகைத்தனே னல்லல்காண் மன்;
21மண்டாத கூறி மழகுழக் காகின்றே
கண்ட பொழுதே கடவரைப் போலநீ

1. புணர்த லென்னு முரிப்பொருள் வந்த முல்லைப்பாட்டுக்கு இச்செய்யுள் மேற்கோள்; நாற்கவி. சூ. 251.

(பிரதிபேதம்)1வெண்பாட்டு மீரடியானொன்றுங்கொச்சகவெண்பாவு மைஞ்சீரடியானொன்றும்நெடு வெண், 2ஐஞ்சீரடியானொன்றும் இரு.