பக்கம் எண் :

நான்காவது முல்லை693

பண்டம் வினாய படிற்றாற் றொடீஇயநிற்
கொண்ட தெவனெல்லா யான்;
கொண்டது;
26அளைமாறிப் பெயர்தருவா யறிதியோ வஞ்ஞான்று
தளவமலர் ததைந்ததோர் கானச்சிற் றாற்றய
லிளமாங்காய் போழ்ந்தன்ன கண்ணிணா லென்னெஞ்சங்
களமாக்கொண் டாண்டாயோர் கள்வியை யல்லையோ;
நின்னெஞ்சங், களமாக்கொண் டியாமாள லெமக்கெவ னெளிதாகும்;
31 புனத்துளா னெந்தைக்குப் புகாவுய்த்துக் கொடுப்பதோ
வினத்துளா னென்னைக்குக் கலத்தொடு செல்வதோ
தினைக்காலுள் யாய்விட்ட கன்றுமேய்க் கிற்பதோ;
அனைத்தாக;
35வெண்ணெய்த் தெழிகேட்கு மண்மையாற் சேய்த்தன்றி
யண்ணணித் தூராயி னன்பகற் போழ்தாயிற்
கண்ணோக் கொழிக்குங் கவின்பெறு பெண்ணீர்மை
மயிலெருத்து வண்ணத்து மாயோய்மற் றின்ன
வெயிலொ டெவன்விரைந்து சேறி யுதுக்காண்
பிடிதுஞ்சு வன்ன வறைமேல நுங்கின்
றடிகண் புரையுங் குறுஞ்சுனை யாடிப்
பனிப்பூந் தளவொடு முல்லை பறித்துத்
தனிக்காயாந் தண்பொழி லெம்மொடு வைகிப்
பனிப்படச் செல்வாய்நும் மூர்க்கு;
இனிச்செல்வேம்யாம்;
46மாமருண் டன்ன மழைக்கட்சிற் றாய்த்தியர்
நீமருட்டுஞ் சொற்கண் மருள்வார்க் குரையவை
யாமுனியா வேறுபோல் வைகற் பதின்மரைக்
காமுற்றுச் செல்வாயோர் கட்குத்திக் கள்வனை
நீயெவன் செய்தி பிறர்க்கு;
யாமெவன் செய்து நினக்கு;
52கொலையுண்கட் கூரெயிற்றுக் கொய்தளிர் மேனி
யினைவனப்பின் மாயோய் நின்னிற் சிறந்தார்
நிலவுலகத் தின்மை தெளிநீ வருதி