பக்கம் எண் :

694கலித்தொகை

மலையொடு மார்பமைந்த செல்வ னடியைத்
தலையினாற் றொட்டுற்றேன் சூள்;
57ஆங்குணரார் நேர்ப வதுபொய்ப்பாய் நீயாயிற்
றேங்கொள் பொருப்பன் சிறுகுடி யெம்மாயர்
வேந்தூட் டரவத்து நின்பெண்டிர் காணாமற்
காஞ்சித்தா துக்கன்ன தாதெரு மன்றத்துத்
தூங்குங் குரவையு ணின்பெண்டிர் கேளாமை
யாம்பற் குழலாற் பயிர்பயி ரெம்படப்பைக்
காஞ்சிக்கீழ்ச் செய்தேங் குறி.

இஃது “அடியோர் பாங்கினும் 1வினைவல பாங்கினும், கடிவரை யில புறத் தென்மனார் புலவர்” (1) என்பதனாற் பிறர் ஏவிய தொழிலைச்செய்தல் 2வல்ல அகப்புறத் தலைவனும் தலைவியும் ழன்னொருகாற் கூடிப் பின்னர் அவனெதிர்ப்பட்டுழி அவன்வயிற் பரத்தைமையால் ஊடிக் குறிநேர்ந்தது.

இதன் பொருள்

இகல்வேந்தன் (2) சேனை யிறுத்தவாய் போல
(3)வகலல்குறோள் கண்ணென மூவழிப் பெருகி
நுதலடி நுசுப்பென மூவழிச் சிறுகிக்
கவலையாற் (4) காமனும் 3படைவிடு வனப்பினோ
டகலாங்க ணளைமாறி 4யலமந்து பெயருங்கா
னகைவல்லேன் யானென்றென் னுயிரோடு படைதொட்ட
விகலாட்டி நின்னை யெவன்பிழைத்தே னெல்லாயான்


1. தொல், அகத். சூ, 23.

2. ‘சேனை யிறுத்தவாய்போல’ என்பது இறுத்தலென்பது வந்து விடுதலென்னும் பொருளில் வருதற்கு மேற்கோள்; சிலப்; 4; 12 அடியார்க்கு நல்.

3. “பெருந்தோண் மடந்தை” (சிலப். 3 : 6.) என்பதற்கு. மகளிர்க்குத் தோள்பெருக்கை இலக்கணமென்று விசேடவுரை எழுதி ‘அகலல்குறோள் கண்ணென மூவழிப் பெருகி’ என்பதை மேற்கோள்காட்டுவர் உரைகாரரிருவரும்.

4. (அ) “உருவி லாள னொருபெருஞ் சிலையொடு, விரைமலர் வாளி வெறுநிலத் தெறிய” சிலப். 30: 25-26. (ஆ) “படையிட்டு நடுங்குங் காமன்” மணி. 3; 23 எனவருபவையும் இங்கேநோக்கற்பாலன.

(பிரதிபேதம்)1வினைவர் பாங்கினும், 2வல்லாதவகப், 3படையிடுவனப், 4அலம்வந்து.