பக்கம் எண் :

நான்காவது முல்லை695

எ - து: அகன்றவல்குல் தோள் கண் என்று சொன்ன மூன்றிடமும்பெருத்து, நுதல் அடி இடை என்று சொன்ன மூன்றிடமுஞ்சிறுத்துக் காமனும்பிறர்க்கு மனக்கவலை செய்தலோடே தன் அம்பை 1விடுதற்குக் காரணமான அழகோடே(1) ஊரிடத்தே 2அலமந்து மோரைவிற்று நீ மீளுங்காலத்தே யான்நகுதலைவல்லேனென்று நக்கு, பின்னர் இகலிடத்தே சென்று விட்டபாண்டியன்சேனை உயிரோடு போம்படி படை தொடு மாறுபோல என்னுயிரோடு போம்படி படையைத், தொட்ட மாறுபாட்டையுடையவளே ! எடீ! யான் நின்னை எப்படித் தப்பினேன் கூறென்றான். எ - று.

இகல்வாயிறுத்த வேந்தன்சேனைபோல என மாறுக.

8 3அஃதவல மன்று மன

எ - து: அதுகேட்ட தலைவி, அளைமாறித் திரிகின்றது மிகவும் எங்குலத்திற்குத் தீதன்று, எ - று.

9(2)ஆய ரெமரானா லாய்த்தியேம் யாமிகக்
காயாம்பூங் கண்ணிக் (3)கருந்துவ ராடையை
(4) மேயு நிரைமுன்னர்க் (5)கோலூன்றி நின்றாயோ
ராயனை 4யல்லை பிறவோ வமரருண்
ஞாயிற்றுப் புத்தேண் மகன்

எ- து: 5எஞ்சுற்றத்தார் ஆயரானால், யாங்கள் மிகவும் ஆய்த்தியரேம்; அதுகிடக்க, நீதான் காயாம்பூவாற்செய்த கண்ணியையும் துவரூட்டின கரிய ஆடையையு 6முடையாய்; மேய்கின்ற நிரைகளுக்குமுன்னே ஒருகோலை ஊன்றி அந்நிரை மேய்த்து நின்றநீ


1. அகலாங்கண் - அகன்ற ஊரிடத்தே. மது 327.

2. பார்ப்பார் அரசர் இடையர் குறவர் முதலியவர்பால்ஒருவரையொருவர் ஒவ்வாமற் கிடக்குஞ் சாதியியல்பாகிய தன்மை யென்னு மெய்ப்பாட்டுள் இடையர் தன்மைக்கு. “ஆயரெமரானால் ........................ புத்தேண் மகன்” (ஒரு பிரதியில் “காயாம்பூங்....................ஆயனையல்லை”) என்பது மேற்கோள் தொல். மெய்ப்பாட்டியல். சூ. 12 இளம்.

3. “அந்துவ ராடைப் பொதுவனோடு” (கலி. 102 : 37,) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க.

4. (அ) ”மேயுநிரை......................மகன்” என்பது தலைவன் வினைவல பாங்கினன் என்பதற்கும் தொல். அகத். சூ. 13. நச். (ஆ) பிறவென்பது அசைநிலையாய்வருதற்கும், நன். இடை. சூ. 22. மயிலை. விருத்தி. இரா. மேற்கோள்.

5. “தாண்டுகா லுான்றிய தனிநிலை யிடையன்” அகம். 274: 8.

(பிரதிபேதம்)1விடுத்தற்கு, 2அலம்வந்து, 3அஃகுதவல, 4அல்லபிறவோ, 5நஞ்சுறறத்தார், 6உடையையாய், உடையராய்.