பக்கம் எண் :

696கலித்தொகை

இடையனாந் தன்மையை உடையையல்லை; வேறாகத் தேவர்களுள் ஞாயிறாகிய தெய்வத்தின் மகனோ? கூறென்றாள். எ - று.

மகன், கன்னன்; 1இஃது இகழ்ச்சி ஆய்த்தியேம் யாமாயின் என்றும் பாடம்.

14 (1)அதனான் வாய்வாளேன்
முல்லை முகையு முருந்து நிரைத்தன்ன
பல்லும் பணைத்தோளும் பேரம ருண்கண்ணு
நல்லேன்யா னென்று நலத்தகை நம்பிய
சொல்லாட்டி நின்னொடு 2சொல்லாற்று கிற்பார்யார்.

எ - து: அதுகேட்டவன் நீ இங்ஙனம் 3இகழ்ந்துகூறுதலால் நின்னோடு ஒன்றுங் 4கூறேன்; முல்லையினது முகையையும் (2) பீலிமுருந்தையும் நிரைத்தாலொத்த பல்லும் (3) பணைபோலுந் தோளும் பெரிய அமர்செய்யும் உண்கண்ணும் 5யான் நல்லேனென்று, நின்னுடைய தகுதியைப் பிறர் நச்சுதலன்றி நீதானே நச்சியிருக்கின்ற 6சொல்லையுடையவளே! நின்னோடு மறுமாற்றஞ் சொல்லுதலை யார் நிகழ்த்துவாரென்றான், எ - று.

[முல்லை] (பல்லு) முதலியன, சினைவினை முதலொடு முடிந்தது, 7ஆற்றுகிற்பார், வினைத்திரிசொல்.

16. சொல்லாதி

எ - து: அதுகேட்டவள், அங்ஙனமாயின் ஒன்றுஞ் சொல்லாதே கொள்ளென்றாள். எ - று.

20 நின்னைத் தகைத்தனேன்

எ - து: அதுகேட்டவன், 8நின்னைப் போகாமல் விலக்கினேனென்றான் எ - று.

அல்லல் காண்மன்.

எ - து: அதுகேட்டவள், இவன் நம்மிடத்து நிகழ்த்துகின்றதோர் வருத்தத்தைப் பாராயென நெஞ்சொடு கூறினாள். எ - று.


1. (அ) உருவென்னு மெய்ப்பாட்டிற்கு, “முல்லை முகையு.................யார்” என்பது மேற்கோள்; தொல். மெய்ப். சூ. 25 பேர். (ஆ) ”முல்லை முகையு முருந்துநிரைத்தன்ன, பல்லர்” (கலி. 103: 6-7) என்பதும் அதன்குறிப்பும் இங்கே ஒப்புநோக்கற்பாலன.

2. பீலி - மயிலிறகு.

3. பணை - மூங்கில்.

(பிரதிபேதம்) 1இதுஇகட்சி. 2சொல்லாற்றகிற்பார். 3மகிழ்ந்து. 4கூறேனென்றான், என்று முல்லை, 5யானல்லனென்று, 6சொல்லுமுடையவளே. 7ஆற்றகிற்பார், 8போகாமல் நினைவிலக்கி னென்னென்றான்.