பக்கம் எண் :

நான்காவது முல்லை703

(1)ஆம்பலென்னும் பண்ணையுடைய குழலாலே குறிசெய்து வருவாயாக என்றாள் எ - று.

இதனால், இருவர்க்கும் புணர்ச்சியுவகைபிறந்தது.

இதனுள், தலைவன் வினைவலபாங்கினனாயவாறு காண்க. இது கைக்கிளை.

இது தரவும் சொற்சீரடியும் நெடுவெண்பாட்டும் சொற்சீரடியும் கொச்சகமும் தனிச்சொல்லும் சொற்சீரடியும் நெடுவெண்பாட்டும் தனிச்சொல்லும் ஒருதாழிசையும் ஐஞ்சீரடியானொன்றும் கொச்சகமும் தனிச்சொல்லும் நெடுவெண்பாட்டும் சொற்சீரடியும் நெடுவெண்பாட்டும் முச்சீரானொன்றும் நெடுவெண்பாட்டும் வெள்ளைச்சுரிதகமும் பெற்று வந்த கொச்சகக்கலி. (8)

(109). காராரப் பெய்த கடிகொள் வியன்புலத்துப்
பேராது சென்று பெரும்பதவப் புன்மாந்தி
நீரார் நிழல குடஞ்சுட் டினத்துள்ளும்
போராரா வேற்றின் பொருநா கிளம்பாண்டி
5றேரூரச் செம்மாந் ததுபோன் மதைஇனள்
பேரூருஞ் சிற்றூருங் கௌவை யெடுப்பவள்போன்
மோரோடு வந்தா டகைகண்டை யாரோடுஞ்
சொல்லியா ளன்றே வனப்பு;
6பண்ணித் தமர்தந் தொருபுறந் தைஇய
கண்ணி யெடுக்கல்லாக் கோடேந் தகலல்குல்
புண்ணில்லார் புண்ணாக நோக்கு முழுமெய்யுங்
கண்ணளோ வாய மகள்;
13இவடான், திருத்தாச் சுமட்டின ளேனைத்தோள் வீசி
வரிக்கூழ வட்டி தழீஇ யரிக்குழை
யாடற் றகையள் கழுத்தினும் வாலிது
நுண்ணிதாத் தோன்று நுசுப்பு;
17இடைதெரியா வேஎ ரிருவருந் தத்த
முடைவனப் பெல்லா மிவட்கீத்தார் கொல்லோ
படையிடுவான் மற்கண்டீர் காமன் மடையடும்
பாலொடு கோட்டம் புகின்:

1. (அ) "இயவர், தீங்குழ லாம்பலி னினிய விமிரும்” ஐங். 215. (ஆ) "ஆய ரினம்பெயர்த் தாம்ப லடைதர” திணைமொழியைம். 27.