21 | இவடான், வருந்தநோய் செய்திறப்பி னல்லான் மருந்தல்லள் யார்க்கு மணங்காதல் சான்றாளென் றூர்ப்பெண்டிர் மாங்காய் நறுங்காடி கூட்டுவேம் யாங்கு மெழுநின் கிளையொடு போகென்று தத்தங் கொழுநரைப் போகாமற் காத்து முழுநாளும் வாயி லடைப்ப வரும். |
இது வினைவலபாங்கிற் றலைவியைக்கண்ட வினைவலபாங்கிற் றலைவன் “காமஞ் சாலா விளமை யோள்வயி, னேமஞ்சாலா விடும்பை யெய்தி” (1) கூறியது. இதன் பொருள். | காராரப் பெய்த கடிகொள் வியன்புலத்துப் பேராது சென்று பெரும்பதவப் புன்மாந்தி நீரார் நிழல (2) குடஞ்சுட் டினத்துள்ளும் (3)போராரா வேற்றின் பொருநா (4)கிளம் (5)பாண்டி | 5 | றேரூரச் (9)செம்மாந் ததுபோன் 1மதைஇனள் பேரூருஞ் சிற்றூருங் கௌவை யெடுப்பவள்போன் (7) 2மோரோடு வந்தா டகைகண்டை யாரோடுஞ் சொல்லியா ளன்றே வனப்பு |
1. தொல். அகத். சூ. 50. இச்சூத்திரத்தின் இவருரையிலும் இச்செய்யுள் இச்செய்திக்கே மேற்கோள். 2. கலி. 107 : 2 - ஆம் அடியையும் அதன் குறிப்பையும் பார்க்க. 3. மத வென்னு முரிச்சொல் மிகுதிப்பொருளில் வருமென்பதற்கு “போராரா வேற்றின................மதை இனள்” என்பது (தொல். உரிச். சூ. 80. நச் ,) உரையிலும் “நாகிளம் பாண்டில்,,,,,,,,,,,மதைஇனள்” என்பது (தொல். உரிச். சூ. 64. “மிகுதியும்” தெய்.) உரையிலும் மேற்கோள். 4. "செல்லு மழவிடைபோற் செம்மாந்து” நள சுயம். 156. 5. (அ) பாண்டில், தேர்பூணு மெருதென்பர், பதிற்றுப்பத்தினுரைகாரர்; பதிற். 64 : 10. (ஆ) எருத்தைப் பாண்டி லென்பது தெலுங்குச் சொல்லென்பர்; இ-வி. சூ. 174. நன். பெயரி. சூ. 16. இரா; 6. செம்மாத்தல். பழ. 315, 363. 7. ‘கண்டை’ என்பது அசைநிலையாய் வந்ததற்கு, “மோரோடு............. வனப்பு” என்பது மேற்கோள்; தொல். எச்ச. சூ. 30. ‘கேட்டை யென்றா’ தெய். (பிரதிபேதம்)1மதைஇயினள், 2மோருடன் வந்தா.
|