பக்கம் எண் :

நான்காவது முல்லை705

எ - து : மழைநிறையப்பெய்த விளக்கங்கொண்ட அகற்சியையுடையநிலத்தே 1சென்று நின்று அவ்விடத்தேநின்ற (1)பெரிய அறுகாகிய புல்லை நிறையத்தின்று நீர் நிறைந்த நிழலிடத்தனவாய (2) இன்னதனைக் குடம்பால் போதுமென்று கருதப்படும் பசுத்திரளில் 2வைத்துக்கொண்டும் ஏனையவற்றிற்கு (3) ஒப்புச் சொல்லப்படும் நாகு (4)போர்த்தொழில் அமையாத ஏற்றினுக்கீன்ற இளைய எருது (5) கொல்லர்வண்டியை ஊராநிற்க இளமையால் இறுமாக்குமாறு போலத் தலையில் மோர்ப்பானையுடனே அழகாலும் இளமையாலும் மிகுதியையுடைய ளாய்ப் பெரிய ஊர்களையுஞ் சிறிய ஊர்களையும் ஆரவாரத்தை உண்டாக்கு வாள்போலே மோரோடே வந்தவளழகை நெஞ்சே காண்பாயாக; இவள்தான் மிக்க வனப்புடைய மகளிரெல்லாரொடும் தன் அழகு ஒவ்வாமை சொல்லப்பட்டவள். எ - று. 

இது சினைவினை முதலொடு முடிந்தது.

9 (6) 3பண்ணித் தமர்தந் தொருபுறந் தைஇய
கண்ணி 4யெடுக்கலாக் கோடேந் தகலல்குற்

 


1. பெரிய அறுகு - யானை யறுகு.

2. இன்னதனைக் குடம் பால் போதும் - இத்தனை குடம் பால் கறக்கும்.

3. “பொருந” என்பதற்கு, உவமிக்கப்படுவா யென்று பொருள் கூறி, ‘பொருவப் படுமவன் பொருந னென நின்றது’ என்றும் (முருகு. 276.) ஒப்பற்றவனேயென்று பொருள் கூறி, ‘பொருநனென்றது தான் பிறர்க்கு உவமிக்கப்படுவானென்னும் பொருட்டு’ என்றும் (மது. 42,) இவரால் எழுதப்பெற்றிருக்கும் விசேடவுரை வாக்கியங்களும் இங்கே அறிதற் பாலன.

4. “கொய்புற் கொடுத்துக் குறைத்தென்றுந் தீற்றினும், வையம்பூண் கல்லா சிறுகுண்டை” நாலடி.. 350.

5. ‘கள்ளிக் கோட்டை முதலிய இடங்களில் மாடுகட்டிய கூட்டு வண்டி கொல்லர் வண்டி யென வழங்கப்படுகின்ற தென்பர்’ என்பது சீவக. 3 -ஆம் பதிப்பு அரும்பத. பக். 995. இது கொல்லா வண்டியெனவும் கொல்லாப்பண்டியெனவும் சிலப். உரையிற் காணப்படுகின்றது.

6. “சிறந்துழியையஞ்சிறந்ததென்ப” என்னும் (தொல். களவி. 3.) சூத்திரத்தின் விசேடவுரையில் உலகத்துத் தலைமகனும் தலைமகளுமாக நம்மால் வேண்டப்பட்டார் அந்தணர் முதலாகிய நான்குவருணத்தினும் ஆயர் வேட்டுவர் குறவர் பரதவ ரென்னும் தொடக்கத்தினும் அக்குலத்தா ராகிய குறு நில மன்னர் மாட்டும் உளராவ ரன்றே. அவ

(பிரதிபேதம்) 1 கன்று நின்றவ்விடத்தே நின்று பெரிய, 2வைத்துக்கொண்டு எனைய, 3மண்ணித் தமதந்தொரு, 4எடுக்கல்லா.