புண்ணில்லார் புண்ணாக நோக்கு (1)முழுமெய்யுங் கண்ணளோ 1வாய மகள் |
எ - து: சுற்றத்தார் கட்டிக்கொண்டு 2வந்து, மயிர்முடியில் ஒருபுறத்தே செருகிவைத்த கண்ணியைச்சுமக்கமாட்டாத பக்கம் ஏந்தின அகன்றவல்குலையுடைய இவ்வாயர் மகள், மனத்திற் (2)காமவேட்கையில்லாத 3இருடிகளும் புண்பட்டு நெஞ்சு வருந்தும்படி பார்க்கும்; அதுவேயன்றி மெய்முழுதுங் கண்ணையுடையவளோ ? எ - று. 4என்பது. (3)கண்கள்செய்கின்றவருத்தம்போல மெய்ம்முழுதும்வருத்து தலின், மெய்முழுதுங் கண்ணளோ என்றதாயிற்று. 13 | (4)இவடான் 5திருத்தாச் சுமட்டின ளேனைத்தோள் வீசி வரிக் 6கூழ வட்டி தழீஇ யரிக்குழை யாடற் றகையள் கழுத்தினும் 7வாலிது நுண்ணியதாய்த் தோன்று நுசுப்பு |
எ - து: இவள் தான் பல நிறத்தையுடைய நெல்லையுடையவாகிய (5)வட்டியை ஒருகையால் அணைத்து மற்றைத்தோளை இளமைச் செருக்குத்
ரெல்லாரினும் செல்வத்தானும் குலத்தானும் வடிவானு முயர்ந்த தலைமகனுந் தலைமகளு மாயினார் மாட்டே ஐயம் நிகழ்வது. அல்லாதார் மாட்டு அவ்வழி மரபினையே சுட்டியுணர நிற்கும்" என்று எழுதி "பண்ணித்...................மகள்" என்னும் பகுதியை ஐயமின்றிச் சுட்டி யுணர்ந்தமைக்கு மேற்கோள்காட்டுவர் இளம். 1. "முழுமெயும்" சீவக. 340, 2156; 'முழுமெயும் - மெய்முழுது மென மாறுக' என்பர் அடியார்க்கு நல்லார்; சிலப். 4 : 6. 2. (அ) "காமமொடு, கடுஞ்சினங் கடிந்த காட்சியர்................முனிவர்" முருகு. 134 - 137. (ஆ) "பெண்டிரு முண்டியு மின்பமென் றுலகிற், கொண்டா ருறூஉங்கொள்ளாத் துன்பங், கண்டன ராகிக் கடவுளர் வரைந்த காமம்" சிலப். 14 : 39 - 42. 3. (அ) "கண்ணாற் கலைஇய நோய்செய்யு, நடாஅக் கரும்பமன்ற தோளாரை" கலி. 112 : 5-6. (ஆ) "இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு, நோய்நோக்கு" குறள். 1091. 4. ஐஞ்சீரடுக்கி வந்ததற்கு "இவடான், றிருந்தாச்...........நுசுப்பு" என்னும்" பகுதி மேற்கோள்; தொல். செய். சூ. 154. நச். 5. வட்டி - கடகப்பெட்டி, இஃது உட்புறம் பனங்குருத்தாலும் வெளிப்புறம் பனையகணியாலும் தெற்றி மிடையப்படுவது. (பிரதிபேதம்)1ஆயர்மகள், 2வந்த.....................சொருகிவைத்த, 3இருடிகளுக்குமுட்பட நெஞ்சு, 4என்றது, 5திருந்தாச், 6கூழைவட்டி, 7வாலிதி னுண்ணிதாத்தோன்று.
|