தோன்ற வீசித் தன் அழகிற்குத் திருந்தியிராத (1)சுமையினையுடையளாய் மெய்க்கட் பூண்டனவன்றிக் கழுத்திடத்திலும் அழகையுடைய மகரக்குழை யாடுதலுண்டான அழகையுடையவள்; அதுவேயன்றி அல்குலுந் தோளுஞ் சுமந்து இளைத்த நுசுப்புக் கண்ணியெடுக்கலா மென்மைக்கேற்ப நுண்ணிதாய் 1நன்றாய்த் தோன்றாநிற்கும். எ - று. 17 | இடைதெரியா வேஎ ரிருவருந் தத்த 2முடைவனப் பெல்லா மிவட்கீத்தார் கொல்லோ 3படையிடுவான் மற்கண்டீர் காமன் (2)மடையடும் பாலொடு கோட்டம் புகின் |
எ - து: தம்மில்வேறு 4பெயர்விளங்கி அழகையுடையராகிய (3) உருப்பசியும் திலோத்தமையும் தம்முடைய தம்முடைய அழகையெல்லாம் இவட்குக் கொடுத்தார் கொல்லோ? அது தெரிந்ததில்லை; 5இவள் தெய்வத் திற்குப் பலியாகச்சமைக்கும் பாலோடே காமன்கோயிலிலே செல்லில் (4) அக்காமனும் நெஞ்சழிந்து தன்கையிற் படையை மிகவும் 6போகடுவன். எ-று.
1. "தந்தை யிலைச்சுமடன்" என்புழி, சுமடென்பது சுமையென்னும் பொருட்டுப்போலும்; "குழிசி பூஞ்சுமட்டிரீஇ" என்புழி இது சும்மாடென்னும் பொருளில் வருகிறது. 2. "பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோ, ளாயர் முதுமகள்" (சீலப். 15 : 117 - 118.) என்பதனாலும் ஆய்ச்சியர் தெய்வத்தருள்பெறப் பலியாக அட்டபாலளித்தல் அறிய லாகும். உருப்பசியும் திலோத்தமையும் அழகிய மகளிர்க்கு உவமை கூறும்படி மிகச் சிறந்த அழகுடையராய் விளங்கும் தேவதாசியர்; இவர்களுள் உருப்பசியாவாள் திருமாலின் கூறாகிய நாராயணமுனிவர் வதரிகாரணியத்துத் தவஞ் செய்வதை அழித்தற் பொருட்டுத் தேவேந்திரனால் விடுக்கப்பட்ட தேவதாசியர்கள் வெட்கியோடும்படி அம்முனிவரால் தமது தொடையில் உண்டாக்கப்பெற்றவளென்றும் ஊரு (தொடை) வில் தோன்றினமையால் அவளுக்கு ஊர்வசி யென்று பெயர்வந்த தென்றும் சொல்லுவர். அப்பெயர் உருப்பசி யெனத் திரிந்து நின்றது. திலோத்தமையாவாள் பிரமதேவரால் அழகுடையபொருளொவ்வொன் றினுமுள்ள சிறந்த அழகை எள்ளளவு எள்ளளவாக எடுத்துச்சேர்த்துப் படைக்கப் பெற்றவளென்ப. இப்பெயரே இப்பொருளை அறிவிக்கும். 4. "சிலை வல்லான் போலுஞ் செறிவினான்" கலி. (143 : 34.) என்று சிறப்பிக்கப் படுதல் கருதி, காமனும் என உம்மை கொடுத்தார். (பிரதிபேதம்)1நன்றாயதொன்றாநிற்கும், 2உடையவனப்பெல்லாமிவட்கீய்த்தார், 3படைவிடுவான், 4பேர்விளங்கி, 5அவள், 6போடுவன்.
|