காமன் மாயோன்மகனாதலின் அவனும் அந்நிலத்திற்குத் தெய்வமாதல் "அவ்வகைபிறவும்" (1) என்றவழி வகை என்றதனாற் கொள்ளப்பட்டது. தெரியாஎன்பது 1செய்தெனெச்சம். இருவர், திருமகளும் 2பூமகளுமெனினுமாம். (2)கண்டீர் வினாவொடு சிவணிநின்ற அசை. 21 | (3)இவடான்
| | இவடான் 3என்று நெஞ்சொடு வினாயினான். வருந்தநோய் செய்திறப்பி னல்லான் மருந்தல்லள் யார்க்கு ணந்தாதல் சான்றாளென் றூர்ப்பெண்டிர் மாங்காய் 4நறுங்காடி கூட்டுவேம் யாங்கு மெழுநின் (4) 5கிளையொடு போகென்று தத்தங் கொழுநரைப் போகாமற் காத்து முழுநாளும் வாயி லடைப்ப வரும் |
எ - து: அதுவேயுமன்றித் தன்னை நோக்கினாரெல்லார்க்கும் வருத்தமாதல் அமைந்தவளென்று கருதி இவ்வூர்களிற் பெண்டிரெல்லாரும் மோருக்கு மாறாத மாங்காயை நறிய 6ஊறுகாயாகக் கூட்டி நுகரக்கடவேம்; நீ எவ்விடத்தும் 7போய் மோர்முதலியன விற்றுத்திரியும் நின் சுற்றத்தாருடனே போவாயாக என்று கூறித் தம்முடைய கணவரைப் புறத்துப் போகாமற் காத்துக்கொண்டு இவள்வருங்காலமேயன்றி ஒருநாள் முழுதும் வாயிலை
1. தொல். அகத். சூ. 18. இவ்வுரைகாரர் தொல். அகத். 5 - ஆம் சூத்திரவுரையில் "படையிடுவான்..................புகின்" என்னும் பகுதியை மேற்கோள்காட்டி இக்குறிப்பையும் எழுதியுள்ளார். 2. "படையிடுவான்.................புகின்" என்னும் பகுதி கண்டீரென்பது அசைநிலையாய்வருதற்கு மேற்; தொல். எச்ச. சூ. 26. 'கண்டீர்' தெய். 3. ஐஞ்சீரடுக்கிய சுரிதகத்தான் வந்ததற்கு, "இவடான், வருந்தநோய்.........வரும்" என்னும் பகுதி மேற்கோள்: தொல். செய். சூ. 154. நச். 4. "கிளையொடுங் காக்கதன் கொழுநன் மார்பே" குறுந். 80. என்னுந் தொடர் இங்கே நோக்கற்பாலது. 5. காடியென்பது ஊறுகாயென்னும் பொருளில் வருதலை, "காடி வைத்த கலனுடை மூக்கின்" என்புழி, 'புளியங்காய் நெல்லிக்காய் முதலியன ஊறவிட்டு வைத்ததனைக் காடியென்றார்' என்று இவர் எழுதியிருக்கும் விளக்கத்தால் அறிக. (பிரதிபேதம்)1செய்ததெனெச்சம், 2பூமகளுமாம் கண்டீர், 3என்றது நெஞ்சொடு, 4நறுங்கடி கூட்டு, 5கிளையொடும் போலென்று, 6ஊறுகறியாகக், 7போயம்மோர்.
|